உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளியானது பா.ஜ., மாவட்ட தலைவர்கள் பட்டியல்: அண்ணாமலை வாழ்த்து

வெளியானது பா.ஜ., மாவட்ட தலைவர்கள் பட்டியல்: அண்ணாமலை வாழ்த்து

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கான பா.ஜ., தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்துக்களை கூறிக் கொண்டார். தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 67 மாவட்டங்களாக செயல்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் உள்கட்சி தேர்தல் துவங்கியது. முதல்கட்டமாக, கிளை தலைவர்களும், மண்டல தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட தலைவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. ஒரு மாவட்டத்திற்கு தலா மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, கட்சி மேலிட தலைவர்களின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r819laq7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட தலைவர்களின் பட்டியல் மட்டும் இன்று வெளியாகியது. சேலம் - சசிகுமார்திருநெல்வேலி வடக்கு -முத்து பலவேசம்தென்காசி - ஆனந்தன் அய்யாசாமிசிவகங்கை - பாண்டிதுரைநாமக்கல் மேற்கு - ராஜேஷ் குமார்நாமக்கல் கிழக்கு - சரவணன்விருதுநகர் கிழக்கு - பென்டகன் பாண்டுரங்கன்திண்டுக்கல் கிழக்கு - முத்துராமலிங்கம்திருப்பத்துார் - தண்டாயுதபாணிகடலுார் மேற்கு - தமிழழகன்கடலுார் கிழக்கு - கிருஷ்ணமூர்த்திநீலகிரி - தர்மன்மயிலாடுதுறை - நாஞ்சில் பாலுஅரியலுார் - டாக்டர் பரமேஸ்வரிகாஞ்சிபுரம் - ஜெகதீசன்செங்கல்பட்டு தெற்கு -டாக்டர் பிரவீன்குமார்கன்னியாகுமரி மேற்கு -சுரேஷ்கன்னியாகுமரி கிழக்கு -கோப்புகுமார்திருவள்ளூர் கிழக்கு -சுந்தரம்தேனி - ராஜபாண்டியன்திருச்சி - ஒண்டிமுத்துகோவை தெற்கு - சந்திரசேகர்ஜன. 20ம் தேதி, மீதமுள்ள மாவட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட, பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து, மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.இதனிடையே, மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், 'பாரதப் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தேசியத் தலைவர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் மோடி வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்',இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Balaji Velusamy
ஜன 21, 2025 04:47

ஜி ராணிப்பேட்டை மாவட்ட தலைவரை நியமிக்க வேண்டும் அது எப்போது


Tiruchanur
ஜன 20, 2025 15:35

..த்தை மூடிட்டு போடா the விடியல் ஆட்சியின் சொம்பே. 3% வோட் லேர்ந்து ஸ்ட்ரெய்ட்டா 11.25% வோட் வாங்கியாச்சு பாஜக. 2031 ல அதுதான் ஆளும்கட்சி.


ameen
ஜன 21, 2025 08:41

அதிமுக உடன் கூட்டணியில் பெற்ற ஓட்டு சதவீதம் அது... தைரியம் இருந்திருந்தால் ஈரோடு இடைதேர்தலில் நின்று இருக்க வேண்டியது தானே.....


V K Sethukumar
ஜன 20, 2025 15:31

Congratulations and Best wishes


Oviya Vijay
ஜன 20, 2025 15:14

சங்கி கூமுட்டைகள் புலம்பிக் கொண்டே தான் இருக்க முடியுமே தவிர என்றைக்குமே தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் அமரவே முடியாது. என்றைக்குத் தான் உணர்வார்களோ இந்த மரமண்டைகள்... ஒவ்வொரு தேர்தல் முடிவுக்குப் பின்னும் அவர்களுக்கு வயிறு எரியுமேயன்றி அவர்களால் வேறெதுவும் செய்ய முடியாது. பாவம். வேண்டும் வரையில் புலம்பிக் கொண்டே இருங்கள்... காலம் பதில் சொல்லும்...


pmsamy
ஜன 20, 2025 12:28

ஒரு தடவை கூட தேர்தல்ல போட்டியிட்டு ஜெயிக்காத அண்ணாமலை!


S. Venugopal
ஜன 20, 2025 09:16

இந்த 12 நிர்வாகிகளில் ஒரே ஒருவர் தான் மகளிர். பிஜேபி பாலிசி படி மொத்த நிர்வாகிகளில் மகளிர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்


Mahendran Puru
ஜன 20, 2025 05:42

தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே வஞ்சனை செய்யும் மத்திய பாஜக. இங்கே பாய் போட்டு படுத்திருந்து பதிவு போடும் காவித்தம்பிகள். மதுரை தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் ரத்து, அதற்கு மத்திய மந்திரியின் ஆகாசப் புளுகு. அடுத்து மெட்ரோ திட்டம் கிடப்பில் போடப்படும். எய்ம்ஸ் கதை உலகறியும். இங்கோ ஆருத்ரா தம்பிகளின் அலம்பல் தாங்க முடியவில்லை.


jayvee
ஜன 20, 2025 05:05

இதுல எவ்வளவு க்ரிமினல்களோ


karthik
ஜன 20, 2025 08:48

திராவிட கும்பலில் இருக்கும் அளவிற்கு நிச்சயமாக இருக்க மாட்டார்கள்... அதனால கவலையில்லாமல் தூங்கவும்


raja
ஜன 20, 2025 03:19

காங்கிரஸ் இல்லா இந்தியா... திருட்டு திராவிடர்கள் இல்லா தமிழகம் .. அமையும் வரை ஓயாதீர்கள் ... வாழ்த்துக்கள்...


Venkatesan.v
ஜன 20, 2025 00:50

இதனால் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே???


சமீபத்திய செய்தி