உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தருமபுரம் ஆதீனத்திடம் பணம்கேட்டு மிரட்டிய வழக்கில் பாஜ மாவட்ட தலைவர் கைது

தருமபுரம் ஆதீனத்திடம் பணம்கேட்டு மிரட்டிய வழக்கில் பாஜ மாவட்ட தலைவர் கைது

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானத்தின் மீது அவதூறு பரம்பும் வகையில் ஆடியோ, வீடியோ உள்ளதாக பணம்கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததோடு சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவொம் என்று ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரியை மிரட்டியதாக அவர் மயிலாடுதுறை போலீசில் கடந்த மாதம் 25ம் தேதி புகார் செய்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஆடுதுறை வினோத், சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் தனியார் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கடந்த 28ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாஜ மாவட்ட தலைவர் அகோரம், ஆதீன நேர்முக உதவியாளர் செந்தில், திருக்கடையூர் விஜயகுமார், செய்யாறு வக்கீல் ஜெயச்சந்திரன், போட்டோ கிராபர் பிரபாகரன் ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். திருக்கடையூர் விஜயகுமார் தங்களுக்கு உதவி செய்தவர் அவருக்கும் இந்த வழக்கில் எந்த தொடர்புமில்லை என்று ஆதீன சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை போலீசில் ஒரு கடிதம் கொடுத்தார். இந்நிலையில் இவ்வழகில் தொடர்புடைய மற்றவர்களை 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மும்பையில் பதுங்கி இருந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை, இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று மாலை கைது செய்து மயிலாடுதுறைக்கு இன்று அழைத்து வர உள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி