உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., நீதி கேட்பு பேரணிக்கும் போலீஸ் அனுமதி மறுப்பு!

பா.ஜ., நீதி கேட்பு பேரணிக்கும் போலீஸ் அனுமதி மறுப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு பா.ஜ., சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x8x1w3u0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் தொடர்ச்சியாக, மதுரை செல்லாத்தம்மன் கோவிலில் இருந்து சென்னை வரை பா.ஜ., சார்பில் நீதி கேட்பு பேரணி நடத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேரணியை பா.ஜ., பிரமுகர் குஷ்பு தொடங்கி வைக்க உள்ளார். எனவே, இந்தப் பேரணிக்கு அனுமதி கேட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் திலகர் திடல் போலீஸில் மனுவும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பா.ஜ.,வின் நீதி கேட்பு பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இது பா.ஜ.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. ஏற்கனவே, இன்று நடக்கவிருந்த பா.ம.க., பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், பா.ஜ.,வின் பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, போலீசார் அனுமதி தராவிட்டாலும், தடையை மீறி பேரணியை நடத்துவோம் என்று பா.ஜ.,வினர் அறிவித்துள்ளனர். இதனால், பரபரப்பு நிலவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

subramanian
ஜன 02, 2025 22:36

சார்..... எல்லோரும் கொஞ்சம் பொறுங்க.... இப்படி அவசரப்பட்டா எப்படி..... நீதி.... சப்ளை இல்லை... மூணு வருஷம் ஆகிறது


பேசும் தமிழன்
ஜன 02, 2025 18:43

இந்த அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டத்தையே நீக்க வேண்டும்...... அவர்கள் யாருக்கு அனுமதி கொடுப்பார்கள்.... ஆளுங்கட்சி மற்றும் அவர்களது ஜால்ரா கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும்..... அப்படியென்றால் மற்றவர்கள் தங்கள் எதிர்ப்பை எப்படி தெரிவிக்க முடியும் ??


Thiyagarajan S
ஜன 02, 2025 18:21

தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார மற்றும் நாத்திக ஆட்சி.... பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்


manokaransubbia coimbatore
ஜன 02, 2025 18:14

தீவிரவாதி சாவு ஊர்வலத்துக்கு 3000 போலீஸ் பாதுகாப்புடன் அனுமதி. இதுதான் திராவிட மாடல்.


abdulrahim
ஜன 02, 2025 18:09

கலக்கம் செய்வதற்க்கே இவர்கள் பேரணி ஊரணி எல்லாம் நடத்துகிறார்கள் , தமிழக அரசு இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.


பேசும் தமிழன்
ஜன 02, 2025 22:07

குண்டு வெடிப்பு குற்றவாளி இறந்த போது ஊர்வலம் சென்றீர்களே .....அப்போது இதை சொல்லி இருக்கலாமே .....இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று !!!


subramanian
ஜன 02, 2025 22:31

ஓடுடா, கதறுடா


venugopal s
ஜன 02, 2025 16:46

பாஜக நீதி கேட்பு போராட்டம் என்பதை அவசரத்தில் தவறுதலாக பாஜக நிதி கேட்பு போராட்டம் என்று படித்து விட்டேன்! அவர்களிடம் இல்லாத நிதியா என்ன?


ghee
ஜன 02, 2025 17:15

உனக்கு ஒரிஜினல் திராவிட புத்தி தானே....எல்லாருக்கும் தெரியும் வேணு


பேசும் தமிழன்
ஜன 02, 2025 18:46

என்ன இருந்தாலும்.... உங்கள் அளவுக்கு இருக்காது என்றே தெரிகிறது....... மூன்று மாதத்தில் 30000 கோடி அடித்தவர்கள் ஆயிற்றே நீங்கள்..... இதை கூட வேறு யாரும் சொல்லவில்லை.... உங்கள் அமைச்சர் சொன்னது தான்.


Shekar
ஜன 02, 2025 19:42

விடியல் கட்சிக்காரர்களுக்கு நிதி மட்டுமே தெரியும், ஒன்று எஜமானர்கள் நிதிகளின் அடிமையாய் இருப்பது மற்றொன்று வானம், பூமி, மனிதன் என அனைத்தையும் சுரண்டி சேர்க்கும் நிதி. நீதி தமிழில் அவர்களுக்கு பிடிக்காத வார்த்தை


Raj S
ஜன 02, 2025 22:54

திருட்டு திராவிடனுக்கு ஒழுங்கா படிக்க தெரிஞ்சிருந்தாதான் அதிசயம்... நீங்க பாத்து கூட தப்பா படிக்கிறது அதிசயம் இல்ல...


Madras Madra
ஜன 02, 2025 16:06

ஜனநாயகத்தின் முதுகெலும்பே எதிர் கட்சிகள் தான் அவை செயல் பட அனுமதி மறுப்பது மன்னராட்சியே மேல் என்றே தோன்றுகிறது


MADHAVAN
ஜன 02, 2025 15:42

இப்படி அரசியல் செய்வதற்கு பேசாமல்,


vbs manian
ஜன 02, 2025 15:34

எதிர் கட்சியில் இருந்த பொது போராட்டங்கள் அடைமழையாய் பெய்தது.


Nallavan
ஜன 02, 2025 15:10

தேர்தல் நெருங்க நெருங்க தான் எதிர் கட்சிகளுக்கு தாங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக எண்ணமே வருகிறது, இது வரை குரல் கொடுக்காத அனைவரும் பேரணியில் கலந்துகொள்ளலாம், ஹி ஹி ஹி


Shekar
ஜன 02, 2025 19:45

தேர்தல் நெருங்க நெருங்க, எதிர் கட்சிக்காரன் கத்திரிக்காய் வாங்க கடைக்கு போனாலே பயம் ஹீ ஹீ ஹீ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை