வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்லவேளை திருபுவனம் மாதிரி காவல் நிலையத்தில் அடித்து, துன்புறுத்தி, கொலைசெய்யப்படவில்லை.
மேலும் செய்திகள்
மாவட்ட பா.ஜ.,- ஐ.டி., விங் தலைவர் கைது
02-Jul-2025
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், முத்துகாளிப்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ்; பா.ஜ., - ஐ.டி., அணி தலைவர். இவர், தன் 'சங்கி பிரின்ஸ்' என்ற 'எக்ஸ்' தள பக்கத்தில், ஏப்., 25ல், தனியார் 'டிவி'யில் ஒளிபரப்பான செய்தியை டேக் செய்து, ஒரு குறிப்பிட்ட மதத்தினரை விமர்சிப்பது போல தகவல் பதிவிட்டுள்ளார்.இது குறித்து வந்த புகாரில், நல்லிபாளையம் போலீசார் விசாரித்தனர். தலைமறைவாக இருந்த பிரவீன் ராஜை, நேற்று போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதற்கிடையில், 'பொதுமக்கள் சமூக வலைதளத்தில், ஜாதி, மத உணர்வுகளை துாண்டி, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில், கருத்துகளை வெளியிடக் கூடாது' என, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜேஸ் கண்ணா எச்சரித்துள்ளார்.பிரவீன் ராஜ் கைதுக்கு, மாவட்ட பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நல்லவேளை திருபுவனம் மாதிரி காவல் நிலையத்தில் அடித்து, துன்புறுத்தி, கொலைசெய்யப்படவில்லை.
02-Jul-2025