உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் விசாரணைக்கு ஆஜராக பா.ஜ., தலைவர் எச்.ராஜாவுக்கு உத்தரவு

போலீஸ் விசாரணைக்கு ஆஜராக பா.ஜ., தலைவர் எச்.ராஜாவுக்கு உத்தரவு

சென்னை : மத மோதலை துாண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, காவல் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, ஹிந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு, காவல் துறை அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து, ஹிந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது; 'வெறுப்புணர்வு, கலவரத்தைத் துாண்டும் வகையில் பேசக்கூடாது' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டது.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா மீது, மத மோதலுக்கு துாண்டுதலாக இருந்தது; நீதிமன்ற நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ், மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.விசாரணைக்கு வருமாறு, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், எச்.ராஜா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ''காவல் துறை விசாரணைக்கு ஆஜராகி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போலீஸ் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர, மனுதாரருக்கு அதிகாரம் இல்லை,'' என, உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஜூன் 24, 2025 15:14

ஹெச் ராஜாவை விசாரணைக்கு காவல் நிலையம் கூட்டிக் கொண்டு போய் பாத்ரூமில் வழுக்கி விழச் செய்தால் தான் அவருக்கு வாய்க்கொழுப்பு அடங்கும்!


N Sasikumar Yadhav
ஜூன் 24, 2025 22:13

உங்க கோபாலபுர எஜமான் திமுக இளைஞரணி தலைவருதான் இந்துமதத்தை கொச்சைபடுத்துகிறார் அவரை கைதுசெய்து காவல்நிலையத்தில் வைக்க கோரிக்கை வைத்திடுங்களேன்.


N Sasikumar Yadhav
ஜூன் 24, 2025 12:29

இதற்கெல்லாம் உத்தரவிடும் நீதிமன்றங்கள் ஒரு இஸ்லாமிய திருமணத்தில் இந்துமத திருமணத்தை கொச்சை படுத்திய திமுக தலைவர் மீது மட்டும் எதற்கு விசாரணைக்கு உத்தரவிடவில்லை. இந்துமதத்தை டெங்கு குரானா வைரசோடு ஒப்பிட்ட திமுக இளைஞரணி தலைவர்மீது விசாரணைக்கு உத்தரவிடவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை