உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரை விமர்சித்த மா.கம்யூனிஸ்ட்: தட்டிக்கேட்ட பா.ஜ.,வினருக்கு அடி

பிரதமரை விமர்சித்த மா.கம்யூனிஸ்ட்: தட்டிக்கேட்ட பா.ஜ.,வினருக்கு அடி

துாத்துக்குடி: பிரதமர் மோடி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் அவதுாறாக பேசியதால், பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவிக்க, இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சு தந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரத்தின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு, துாத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள அவருடைய சிலைக்கு, நேற்று மார்க் சிஸ்ட் கம்யூ., கட்சியினர் மாலை அணிவித்த பின், மக்கள் ஒற்றுமை பிரசார இயக்கத்தை துவக்கினர். சி.ஐ.டி.யு., மாநில செயலர் ரசல் பேசும்போது, ''இந்திய பொருளாதார இறையாண்மை சீரழிந்து விட்டது. அதற்கு காரணம் பிரதமர் மோடி தான்,'' என பேசினார். இதை கேட்டதும், அங்கு இருந்த பா.ஜ., நிர்வாகி சொக்கலிங்கம், ரசல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கினார். அதை கண்ட கம்யூ., நிர்வாகிகள் பேச்சிமுத்து, நாகராஜ் உள்ளிட்டோர், சொக்கலிங்கத்தை தாக்கினர். இதற்கு எதிராக பா.ஜ.,வினர், கம்யூ., கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்னை செய்ய, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, இரு கட்சியினரும் மோதிக் கொண்டனர். பா.ஜ., மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகள் அங்கு திரண்டு, மா. கம்யூ. கட்சியினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sundar R
செப் 06, 2025 11:11

தூத்துக்குடியில், தமிழர்களான சிபிஎம் மற்றும் பாஜக தொண்டர்களிடையே பெரிய அளவில் சண்டை நடந்தது ‌ மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இரு தமிழர் கூட்டத்திற்கிடையே இதுபோல் சண்டையிட்டால், அது தெலுங்கு கிறிஸ்தவ மிஷனரி கட்சியான திமுகவுக்கு சாதகமாக ஆகிவிடுமே. பச்சை தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் துணை ஜனாதிபதி ஆவதைத் தடுப்பதற்காக தெலுங்கு திமுக அர்த்த ராத்திரியில், கும்மிருட்டில் தேடிக் கண்டுபிடித்து, மாவோயிஸ்ட் நக்ஸல்களின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை போட்டி வேட்பாளராக நிறுத்துகிறான். தமிழர்கள் எப்போதுதான் முன்னுக்கு வருவது? தமிழர்களுக்கிடையே சண்டை போட்டால், தெலுங்கு திமுக காரர்கள் தான் மேன்மேலும் முன்னேறிச் செல்வார்கள். ஆகவே, தமிழர்களாகிய சிபிஎம், பாஜக ஆகிய கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு, 2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுகவை மின்சார எரியூட்டல் மூலமாக நன்றாக தகனம் செய்ய வேண்டும். கட்சி பேதம் பார்க்காமல், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எல்லா கட்சியினரும், தெலுங்கு திமுகவுக்கு எதிராக ஒன்றாக திரண்டு 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும்.


Arjun
செப் 06, 2025 10:46

நாட்டிற்கு நல்லது நடந்தால் பிடிக்காது


Velayutham rajeswaran
செப் 06, 2025 10:31

ஒர நாளும் நேர்மையான விமர்சனம் செய்ததே கிடையாது


m.arunachalam
செப் 06, 2025 08:59

பாரபட்சமில்லாமல் பிரதமரை விமர்சிப்பது மட்டுமே தொழிலாக செய்யும் அவலம் பரவிவிட்டது . இது கையாலாகாததனத்தின் வெளிப்பாடு மட்டுமே


நிக்கோல்தாம்சன்
செப் 06, 2025 05:14

எதற்கெடுத்தாலும் இந்திய பிரதமரை தரக்குறைவாக திட்டுவதை பார்க்கையில் இந்த ரசல் போன்ற வந்தேறிகளை கண்டால் வெறுப்புதான் வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை