உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின், உதயநிதி மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு கவர்னரிடம் பா.ஜ., மனு

ஸ்டாலின், உதயநிதி மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு கவர்னரிடம் பா.ஜ., மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மீது கிரிமினல் வழக்கு தொடர, கவர்னர் ரவியிடம், பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் அனுமதி கோரியுள்ளார்.

இது தொடர்பாக கவர்னர் ரவியிடம் நேற்று அவர் அளித்த மனு:

இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் நியமிக்கப்படும் கவர்னரையும்; பதவியையும் அவமதிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் பேசியுள்ளனர். கவர்னர் ரவிக்கு எதிராக இழிவான இனவெறி கருத்துகளை பரப்பி வருகின்றனர்.சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், 'ஆளுனரா, ஆரியரா? திராவிடம் என்ற சொல் நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். 'திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் கவர்னர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டு பாடச் சொல்வாரா? தமிழக மக்களின் உணர்வுகளை வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் கவர்னரை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்' என கூறியுள்ளார்.ஓராண்டுக்கு முன் துணை முதல்வர் உதயநிதி, கவர்னரின் உயரிய மாண்பை குலைக்கும் வகையில் தரக்குறைவாக பேசிய வீடியோ, இப்போது அவரது கட்சியினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், 'கவர்னர் ரவிக்கு எவ்வளவு திமிர், எவ்வளவு கொழுப்பு. நீங்கள் யார்; உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? கவர்னர் மக்கள் பிரதிநிதி அல்ல; தபால்காரர் மட்டுமே. முதல்வர் பகிர்ந்துள்ள விஷயங்களை மத்திய அரசுக்கு வழங்குவது மட்டுமே கவர்னரின் வேலை.'அவர் ஆர்.என்.ரவி அல்ல; ஆர்.எஸ்.எஸ்., ரவி. தமிழ் மக்களிடம் சென்று உங்கள் சித்தாந்தத்தை சொல்லுங்கள். அவர்கள் உங்களை செருப்பால் அடிப்பர்' என, உதயநிதி பேசியுள்ளார்.இவை, பாரதிய நியாய சட்டத்தின்படி குற்றமாகும். எனவே, பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதி தொகுப்பு பிரிவு 218ன்படி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் மீது, கிரிமினல் வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

மாயவரத்தான்
அக் 31, 2024 22:16

தேர்தலில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்தார். நாம் தமிழர்தான் டெபாசிட் கூட வாங்கவில்லை.


venugopal s
அக் 25, 2024 16:55

அப்படிப் பார்த்தால் இங்கு தமிழக முதல்வரையும் தமிழக அரசையும் ஆதாரமின்றி அவதூறாகப் பேசும் கருத்து கந்தசாமிகள் என்ற பெயரில் உலாவும் சங்கிகள் எல்லோரையும் பிடித்து உள்ளே தள்ளி நொங்கெடுக்க வேண்டும்!


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 26, 2024 12:57

வேணு என்கிற சிங்க்கோக்கு ஜால்ரா சாஹிபு .. உன்னால ஒரு மணியையும் உருட்டமுடியாது . முடிஞ்சா பண்ணிதான் பாரேன். சம்பந்தமே இல்லாமல் வாய்க்குவாய் சங்கி என சொல்லும் பேடிகளை முதலில் நுங்கெடுக்கவேணும். பிடிப்பிக்கவில்லையெனில் தாய்வீடான பாகிஸ்தானுக்கு ஓடிப்போ இங்க யாரும் உன்னை வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடல ..


Ganapathy Subramanian
அக் 25, 2024 10:37

அன்று எம்ஜியார் இல்லாவிட்டால் கருணாவும் அண்ணா நகரில் எச் வி ஹண்டேயிடம் தோற்றதாக சரித்திரத்தில் இருந்து இருக்கும். புரட்சித்தலைவரின் கருணையால் 1980 தேர்தலில் அண்ணா நகரில் அன்றைய தேர்தலில் கட்டுமரம் எழுநூறு ஓட்டுகள் வித்தியாசத்தில் கரையேறியது. தோற்ற கட்டுமரத்தை வென்றதாக அறிவித்தது புரட்சித்தலைவரின் வேண்டுகோளால் என்று ஒரு செய்தி அப்போது பரவியது எல்லோருக்கும் தெரியும்.


rameshkumar natarajan
அக் 25, 2024 10:22

What Stalin and Uday said is correct only. Governor is an elected post not an elected position by CM. So, he should not utter any political statements.


Sridhar
அக் 25, 2024 10:17

இதுக்கு எதுக்குங்க போட்டோ எடுத்து போஸ் கொடுக்கறீங்க? அவ்வளவு ரோஷமுள்ள ஆளா இருந்தா இந்நேரம் ஆளுநர் நடவடிக்கை எடுத்துருக்கணும். வேணா பாருங்க, அப்படியே கிடப்புல போட்ருவாங்க. இவனுகள பாத்தாலே எரிச்சல் வருது.


Pandianpillai Pandi
அக் 25, 2024 09:23

என்ன சார், இது பா ஜ க கவர்னரை இப்படி கைப்புள்ள கணக்கா டீல் பண்ணுது . மறுபடியும் நீதிமன்றத்துல மன்னிப்பு கோரி நிக்கப் போறாரு. கேசு ரொம்ப வீக்கு . கவர்னருக்கு பா ஜ க சப்போர்ட்டுனா தி மு க விற்கு மக்கள் சப்போர்ட்டு சார். உண்மையை மறைக்க முடியாது. தமிழ் நாட்டை திராவிடத்தை தரம் தாழ்த்த விடமாட்டோம். மக்கள் வீதிக்கு வருவோம்.


Dharmavaan
அக் 25, 2024 07:54

சட்டம் ன்ன சொல்கிறது ஆளுநரையும் பிரதமரையும் அவதூறு அவமரியாதை செய்யலாம் செய்தால் என்ன தண்டனை மாநில அரசு இதை செயல்படுத்தாவிட்டால் மத்திய போலீசை அனுப்பி தண்டிக்க முடியுமா.


Sankar Ramu
அக் 25, 2024 06:17

அப்படியே சட்டையில் கட்சி கொடியுடம் துணை முதல்வராக இருக்க தகுதியற்றவர்னு ஒரு கேஸ்.


Dhurvesh
அக் 25, 2024 06:14

இவன்தானே திருவண்ணாமலையில் தோற்று டெபாசிட் வாங்காதவன்


vadivelu
அக் 25, 2024 07:17

ஆமாம் , நம்ம காமராஜ் விருதுநகரில் , அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் தோற்றது போல .தோல்விதான் வெற்றியின் முதல் படி .எவனெல்லாம் அரசியல் பேசறான் பார்.


Dharmavaan
அக் 25, 2024 07:49

அதனால் என்ன ரவுடி பொறுக்கிகளை தண்டிக்க கூடாதா .அவர் நாட்டின் குடிமகன்


N Sasikumar Yadhav
அக் 25, 2024 09:04

உன்னய மாதிரியான ஆட்கள் இலவசம் வாங்கிக்கொண்டு திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப்போடும் ஆட்கள் அதிகமாக இருகிறார்கள்


Mani . V
அக் 25, 2024 05:42

இதெல்லாம் மக்களை ஏமாற்றப் போடும் நாடகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை