உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாஜ., மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியானது: அமைப்பு பொதுச்செயலாளராக மீண்டும் கேசவவிநாயகன் நியமனம்

பாஜ., மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியானது: அமைப்பு பொதுச்செயலாளராக மீண்டும் கேசவவிநாயகன் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ., மாநில துணைத்தலைவராக நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அமைப்பு பொதுச்செயலாளராக கேசவவிநாயகன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக பா.ஜ., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nmwken30&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநில துணைத்தலைவர்களாகசக்கரவர்த்திவி.பி.துரைசாமிகே.பி. ராமலிங்கம்கரு.நாகராஜன்சசிகலா புஷ்பாகனகசபாபதிடால்பின். ஸ்ரீதர் சம்பத்பால் கனகராஜ்ஜெயபிரகாஷ்வெங்கடேசன்கோபால்சாமிகுஷ்புசுந்தர் ஆகிய 14 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மாநில அமைப்பு பொதுச்செயலாளராககேசவ விநாயகன்பொதுச்செயலாளராகபொன்.வி.பாலகணபதிராம.சீனிவாசன்முருகானந்தம்கார்த்தியாயினிஏ.பி.முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மாநில செயலாளர்களாககராத்தே தியாகராஜன்வெங்கடேசன்மலர்கொடிசுமதி வெங்கடேசன்மீனாட்சிசதீஷ்குமார்மீனாதேவ்வினோஜ் பி.செல்வம்அஸ்வத்தாமன்ஆனந்தபிரியாபிரமிளா சம்பத்கதளி நரசங்கபெருமாள்நந்தகுமார்ரகுராமன் என்ற முரளிஅமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட15 பேர் நியமனம்மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகரும்மாநில இணை பொருளாளரக டாக்டர் எம்.சிவசுப்பிரமணியம்மாநில பிரிவு அமைப்பாளர் / இணை அமைப்பாளராக கே.டி.ராகவன், நாச்சியப்பனும்மாநில அலுவலக செயலாளராக சந்திரன்மாநில சமூக ஊடக அமைப்பாளராக பாலாஜிமாநில தகவல் தொழில்நுட்ப அமைப்பாளராக மகேஷ்குமார்மாநில ஊடக அமைப்பாளராக ரெங்கநாயகலுஎன்ற ஸ்ரீரங்காமாநில இளைஞரணி தலைவராக எஸ்ஜி சூர்யாமாநில மகளிர் அணி தலைவராக கவிதா ஸ்ரீகாந்த்மாநில ஓபிசி அணி தலைவராக வீர திருநாவுக்கரசுமாநில எஸ்சி அணி தலைவராக சம்பத்ராஜ்மாநில எஸ்டி அணி தலைவராக சுமதிமாநில விவசாய அணி தலைவராக நாகராஜ்மாநில சிறுபான்மையினர் அணி தலைவராக ஜான்சன் ஜோசப் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறப்பித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.நடிகை குஷ்பு, கடந்த 2020ம் ஆண்டு பா.ஜ.,வில் இணைந்தார். அதன் பிறகு அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. பிறகு, 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னர், அந்த பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

ராஜா
ஜூலை 31, 2025 00:15

ஒரு கட்சி இ வி எம் ஐ நம்பி இருக்க இன்னொரு கட்சி பணபலம் நம்பி இருக்குதே முடிவை டெல்லி ஹிட்லர் கிட்ட போய் கேட்ட பிறகு தான் தெரியும்.


vivek
ஜூலை 31, 2025 06:11

முடிஞ்சது கதை


Sivagiri
ஜூலை 30, 2025 22:23

இப்ப தெரியுதா , எல்லாம் க்ரிப்டோ டிஎம்கே - அனுப்பி வைக்கப்பட்ட ஸ்லீப்பர் செல்கள்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 30, 2025 21:12

விஜயதாரணியை விட்டு விட்டார்களே..... அகில இந்திய அளவில் பதவி கொடுப்பார்களோ???


BALAMURUGAN G
ஜூலை 30, 2025 20:35

இந்த ஓங்கோலார் குடும்ப வாரிசுகளின் கொத்தடிமைகளுக்கு பொது அறிவு என்பது கிஞ்சித்தும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிறந்து இருந்தாலும் அவர்கள் இந்திய குடிமக்கள். எந்த மாநிலத்திலும் போட்டி இட அரசியல் சாசனம் உரிமை வழங்கி உள்ளது. ஆனால், அந்நிய தேசத்தின் குடிமகள் நமது தேசத்தில் குடியுரிமை பெற்றாலும் சகல உரிமைகளும் வழங்கப்படாது. இந்திய குடிமகன் இத்தாலிய குடியுரிமைப் பெற்றால் அந்த நாட்டில் என்னென்ன சலுகைகள்/உரிமைகள் வழங்கப்படுமோ அதே அளவிற்கு மட்டுமே நமது தேசமும் வழங்கப்படும் என்பது நமது சட்டம்.


Sundar R
ஜூலை 30, 2025 19:59

வெற்றிபெற்ற தலைவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். பாஜக தற்போது சரியான பாதையில் செல்கிறது. எனவே, பாஜக பாதை மாறிப் போகக்கூடாது: திமுகவை ஒழித்தால் தான் தமிழகத்தில் பாஜக வளரும். அதற்காகவே தமிழகத்தில் பாஜக மேன்மேலும் வளரணும். விரைவில் ஆட்சிக்கு வரணும். அப்போது தான் தமிழகத்தில் பாஜகவில் நல்ல தலைவர்கள் வந்து, மக்களுக்கு பயனுள்ள பல சேவைகள் செய்து பெரும்புகழ் பெறுவார்கள். எனவே, முதல் வேலையாக பாஜக, 2026 தேர்தலில், திமுகவை தமிழ்நாட்டின் வடக்கு எல்லைக்கு வெளியே, சூலூர் பேட்டைக்கு அப்பால் நெடுந்தூரம் தூக்கி வீச வேண்டும்.


S.L.Narasimman
ஜூலை 30, 2025 19:51

திருச்சி சிவா நிச்சயம் புளாங்கிதம் அடைந்து பெருமைபட்டு கொண்டிருப்பாரு..


திகழ்ஓவியன்
ஜூலை 30, 2025 21:14

அதை விட பால கணபதி நடு ரோட்டில் மீட்டிங்கில் கண் கொள்ள காட்சி ஆயிற்றே


திகழ்ஓவியன்
ஜூலை 30, 2025 19:25

ஸ்டேஜ் இல் இருக்க இவ்வளவு ஆள் , வோட்டு போட எங்க ஆட்கள் ?


தியாகு
ஜூலை 30, 2025 19:23

அண்ணாமலையை திட்டமிட்டு ஓரம் கட்டிய கும்பல் தமிழக பாஜகவில் இருக்கும் வரையில் தமிழக பாஜக தேறாது.


Gnana Subramani
ஜூலை 30, 2025 19:05

நேற்று வந்தவர்களுக்கு எல்லாம் பதவி. ஆனால் இந்த லிஸ்டில் கூட ஹெச் ராஜா பெயர் இல்லை


கூத்தாடி வாக்கியம்
ஜூலை 30, 2025 18:53

இந்த பூத் எல்லாம் தூகிட்டு ஆன்லைன் ஓட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க பாஸ்.


மூர்க்கன்
ஜூலை 31, 2025 16:20

அட சரியாத்தான் சொல்றாரு?? அப்போ பாஜக ஆட்சிதான்????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை