உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சார் யாருன்னு கேட்டால் சுர்ரென்று கோபம் வருகிறது: தமிழிசை

சார் யாருன்னு கேட்டால் சுர்ரென்று கோபம் வருகிறது: தமிழிசை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அந்த சார் யாரு என்று கேட்டால் சுர்ரென்று கோபம் வருகிறது என்று தமிழக அரசு மீது பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார். கட்சியின் முக்கிய தலைவர்களை சந்திக்க புதுடில்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7vajohp8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்சியில் இன்னும் 10 நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் புதிய மாநில தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாநில தலைவர் தேர்வுக்காக சிறப்பு அதிகாரிகள் இருப்பார்கள். நான் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கான அதிகாரி என்பதால் அது தொடர்பாக டில்லி செல்கிறேன். கட்சியின் தலைவர் நட்டாவை சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்தும் பேச உள்ளேன். குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக நிகழ்வு, பெண்களுக்கு நடந்த பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறவும் செல்கிறேன். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர், அவர்கள் முன்னேற்றத்துக்கு இவர்களே முழு பொறுப்பு என்பது போல முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். பா.ஜ., ஆளும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெண்களை லட்சாதிபதி ஆக்கி கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு டாஸ்மாக்கால் பெண்கள் கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக்கை மூடுவோம் என்று கூறி இங்கு ஆட்சிக்கு வந்தனர். எந்த வாக்குறுதியும் சரியாக நிறைவேற்றாமல் விளம்பரம் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக அரசு மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லாமல் நீதிமன்றங்கள் தலையிடக் கூடிய மோசமான நிலையில் தமிழகத்தில் பெண்களின் நிலை இருக்கிறது. அந்த சார் (அண்ணா பல்கலை. விவகாரம்) யார் என்று கேட்டால் இவர்களுக்கு சுர்ரென்று கோபம் வருகிறது. எந்த பிரச்னை என்றாலும் பெண் குழந்தைகள் சீரழிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மத்திய அமைச்சர்களை சென்று தமிழக அமைச்சர்கள் பார்க்கிறார்கள், நன்றி சொல்கிறார்கள். ஆனால் கீறல் விழுந்த ரிக்கார்டு போல ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பல துறைகளில் மத்திய அரசின் நிதி திருப்பிப் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் இதற்கு பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். மத்திய அரசு ஒத்துழைப்புக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Sudha
டிச 31, 2024 22:05

இந்த ஒரு கேஸ் யார் தீர்த்து வைக்கிறார்களோ அவர்களுக்கே 2026 தமிழகம்


தமிழ்வேள்
டிச 31, 2024 20:38

ஒண்ணு ரெண்டு பயல்களாக இருந்தால் அடையாளம் காட்டி விடலாம்.. ஆனால் திராவிஷ கும்பலில் வாய்ப்பு கிடத்த பயல்கள் அத்தனை பேரும் சார் -களே... இவர்கள் பம்மிக்கொண்டு திரியும் வரை சந்தேகம் கட்சியின் உச்ச தலைகளை நோக்கியே நகரும்.. இவர்களின் வாழ்க்கை லட்சணம் வரலாற்று லட்சணம் அந்த ரகம்.


MADHAVAN
டிச 31, 2024 18:10

எந்த ஊர்ல இருக்கும் பெண்கள் பாதுகாப்பை இருக்காங்க, லட்சாதிபதியா இருக்காங்கன்னு மக்களுக்கு தெரியும், நீங்க உங்க கட்சில இருக்கும் மந்திரிகளை கற்பழிப்பு பண்ணாம இருக்க சொல்லுங்க


MADHAVAN
டிச 31, 2024 18:06

ஹத்ராஸ் ல கற்பழிப்பு பண்ணினது யாரு ?


MADHAVAN
டிச 31, 2024 17:54

மத்திய மந்திரி பிஜேபி மந்திரி பிரிஜ் பூஷன் பண்ணுன கற்பழிப்பு மறந்துடுச்சா ? ஹத்ராஸ் ல நடந்த கற்பழிப்பு மற்றும் யோகி தான் முன்னாடி நின்னு தீ இட்டு கொளுத்தியது மறந்துடுச்சா ?


K.n. Dhasarathan
டிச 31, 2024 17:28

அம்மா அப்படியே அந்த பொள்ளாச்சி சம்பவத்தை விரைவு படுத்த சொல்லி போராட்டம் நடத்தினால் நல்லது, கவர்னரிடம் நிறைய கோப்புகள் தூங்குகின்றன, முன்னாள் ஆ .தி மு.க அமைச்சர்கள் மற்றும் சில நயா வஞ்சக அதிகாரிகள், பொய் ஜே பி மாற்று ஆ.தி மு க கட்சி அல்லக்கைகள் என்று பல பேர் பொள்ளாச்சி சம்பவத்தில் மாட்டுவார்கள். கோயம்பத்தூர் மக்கள் உங்களை கையெடுத்து கும்பிடுவார்கள். நகைச்சுவை நாயகன் அண்ணாமலை யை விட்டு இதற்க்கு ஒரு ட்ராமா போட்டால் சிறப்பு, நீதி துறை சரியில்லையம்மா, ரொம்ப நாளா தூங்குகிறார்கள், நீங்கள் வந்து ஒரு பிட்டை போட்டால் நன்றாயிருக்கும்.


Sampath Kumar
டிச 31, 2024 17:11

நீங்க எப்ப சங்கிய மாறுனீங்க என்று கேட்டால் உங்களுக்கு உங்களுக்கு சூர் என்று வருமே ppadithaan மேடம் இதுவும்


Suppan
டிச 31, 2024 17:05

இனி மேல் யாரும் யாரையும் "சார்" என்று விளிக்கக்கூடாது. இப்படிக்கு விடியல்


Sidharth
டிச 31, 2024 16:58

யக்கா அந்த பெட்ரோல் விலை பீதியடைய வைக்கிறது டீசல் விலை திடுக்கிட வைக்கிறது வஜனம் பேசுங்கக்கா ,சூப்பரா இருக்கும் இப்போ


BalaG
டிச 31, 2024 16:30

அவன் போனை ட்ராக் பண்ணி பார்த்தால் தெரியும். இல்லனா அவனை நாலு சாத்து சாத்தி, பயமுறுத்தி உண்மையை வாங்குகப்பா. அப்பாவிகளை என்ன பாடு படுத்தாராங்க.. அவன்கிட்ட இருந்து இந்த மேட்டரை வாங்க முடியாதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை