உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வன்கொடுமை விவகாரம் கவர்னரிடம் பா.ஜ., மகளிரணி புகார்

வன்கொடுமை விவகாரம் கவர்னரிடம் பா.ஜ., மகளிரணி புகார்

சென்னை:'அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்' என, கவர்னர் ரவியிடம், தமிழக பா.ஜ., மகளிரணியினர் மனு அளித்தனர்.முன்னாள் கவர்னர் தமிழிசை தலைமையில், நடிகை குஷ்பு, எம்.எல்.ஏ., சரஸ்வதி, தமிழக பா.ஜ., மகளிரணி தலைவர் உமாரதி, முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதாரணி, ராதிகா உள்ளிட்டோர், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று இரவு 7:00 மணியளவில் கவர்னரை சந்தித்தனர்.பின், தமிழிசை அளித்த பேட்டி: மாணவி புகாரில் கூறிய, 'யார் அந்த சார்?' என்பதை காவல் துறை கண்டுபிடிக்க வேண்டும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை உள்ளது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !