உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரு திராவிட இயக்கங்களை ஒழிப்பதே பா.ஜ., எண்ணம்

இரு திராவிட இயக்கங்களை ஒழிப்பதே பா.ஜ., எண்ணம்

திராவிட கட்சிகளை ஒழிப்பதே பா.ஜ., எண்ணம் திருமாவளவனுக்கு எதிராகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராகவும் விமர்சனம் செய்தால், வி.சி.,க்கள் கோபப்படுவர். அதனால், மோசமான விளைவுகள் ஏற்படலாம். அதை வைத்து, வி.சி.,க்கள் மீது தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கும். இதையடுத்து, இரு கட்சிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு, கூட்டணி உறவு சிதையும் என கணக்கு போட்டு சிலர் காய் நகர்த்துகின்றனர். அதெல்லாம் ஒரு போதும் நடக்காது. ஏனென்றால், நாங்கள் ஈ.வெ.ரா., அம்பேத்கர், காரல் மார்க்ஸ் கொள்கையை பின்பற்றி வருகிறோம். அதே கொள்கையை தான் தி.மு.க.,வும் பின்பற்றி வருகிறது. அதனால், என்ன சூழ்ச்சி செய்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள உறவை பிரிக்க முடியாது. உணர்வால், உள்ளத்தால் இரு கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. எதிரிகள் சூழ்ச்சியை இரு கட்சியினரும் உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பா.ஜ.,வின் எண்ணம், தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சியை உருவாக்குவது. அதை, இரு திராவிட கட்சிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். - திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Guru
அக் 25, 2025 17:19

இரண்டு திராவிட இயக்கங்களும் சேர்ந்து தமிழ்நாட்டை கொள்ளையத்தது போதும். இரண்டுமே ஒழிக்கப்படவேண்டியவை


கூத்தாடி வாக்கியம்
அக் 25, 2025 14:05

இவரு கூட்டணியில் இருந்தாலே அந்த கட்சி தானா அழியும்


Matt P
அக் 25, 2025 12:03

அடித்த கொள்ளைகள் போதாதா? நடந்த கொலைகள் இன்னும் தொடர வேண்டுமா? ..தமிழர்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிலை நிறுத்த இரண்டு கழகங்ளும் ஒழிக்கப்பட வேண்டும் . ..என்று தமிழக மக்கள் உணரும் வரை தமிழகத்திற்கு தலை குனிவு தான். இந்தியா ஒன்றுபட்ட நாடு ..திராவிட கட்சிகள் தான் தொடர வேண்டும் என்று எந்த தலையெழுத்தும் இல்லை.


Matt P
அக் 25, 2025 11:54

நல்ல எண்ணம் தானே. உங்க கட்சியையும் சேர்த்து இருக்கலாம். ஆனால் உங்களை எல்ல்லாம் யாரும் பொருட்டா எடுத்து கொள்வதில்லை போலிருக்கு.


சந்திரசேகர்
அக் 25, 2025 11:48

உங்கள் ரெண்டு பேருடைய கொள்கையும் ஒண்ணா இருக்கும் போது ஏன் தனித்தனியாக கட்சி நடத்துறீங்க பேசாமல் உங்கள் கட்சியை திமுகவில் இணைத்து விட வேண்டியதுதானே. சிதம்பரம் தொகுதிக்கு ஒரு அமைச்சர் கிடைப்பார். நல்ல வருமானம் வரும் . திமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிடைக்கும். இப்பவே நீங்கள் அவர்கள் கொள்கையைத் தான் பரப்பி கொண்டு இருக்கிறீர்கள். ஒருவேளை விசிக திமுகவை விட்டு வெளியே வந்தால் நீங்கள் மட்டும் தான் வெளியே வருவீர்கள். உங்கள் கட்சிக்காரர்கள் திமுகவில் ஐக்கியமாகி விடுவார்கள்


shyamnats
அக் 25, 2025 10:52

திராவிட கட்சிகளை ஒழிப்பதே பா.ஜ., எண்ணம் , சரியாக சொன்னார். பொது மக்களும் அதையே விரும்புகிறார்கள். மக்களை டாஸ்மாக் போதையில் ஆழ்த்தியும், தேவையில்லாமல் இலவசங்களை வழங்கியும் , மக்களை நன்னெறிப்படுத்தும் ஆன்மீகத்தை ஒழிக்க முயலும் இந்த திராவிட கட்சிகள் களையப்பட வேண்டியவையே . தமிழகத்தை முறையாக ஆட்சி செய்யாமல் , 10 லட்சம் கோடி கடனில் ஆழ்த்திய இவை நமக்கு தேவையில்லை, ஆட்சி மாற்றம் அவசியம் தேவை.


Chandru
அக் 25, 2025 10:05

உடைந்த பிளாஸ்டிக் நாற்கலிக்கே இந்த நிலை


angbu ganesh
அக் 25, 2025 09:43

அட்டூழியம் ரொம்ப திராவிடம் அழிய நினைக்கல... மாதிரி உழைக்காம வியர்வை நிலத்தில் சிந்தாம ஊற ஏமாத்தி பொழைக்கறீங்களே.. அரசியலை தான் அழிக்க வேண்டும்


duruvasar
அக் 25, 2025 09:43

உங்க கட்சியை நீங்களே அழிகிறீங்களே கேட்பது ?


Muralidharan S
அக் 25, 2025 09:33

கட்சி சாராத பொதுமக்களின் எண்ணமும் திராவிட கட்சிகளை ஒழிப்பதுதான்.. அதுமட்டும் அல்லாமல் தமிழகம் செழித்து வளர, கட்சி என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து- ஜாதி-ரவுடி-தாதா-குண்டர்களின் கும்பல்களையும் சேர்த்து ஒழிக்கவேண்டும்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை