உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசு புனையும் கதைக்கு நாங்கள் வசனம் எழுத முடியாது: ரூ.4 கோடி பிரச்னையில் பா.ஜ., பதிலடி

தி.மு.க., அரசு புனையும் கதைக்கு நாங்கள் வசனம் எழுத முடியாது: ரூ.4 கோடி பிரச்னையில் பா.ஜ., பதிலடி

சென்னை : ''பா.ஜ., மீது பழி சுமத்த, தி.மு.க., அரசு எழுதிய கதைக்கு, நாங்கள் வசனம் எழுத முடியாது,'' என, தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறினார்.லோக்சபா தேர்தலின்போது, ஏப்., 4ல், பறக்கும் படையினர், தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையைச் சேர்ந்த சதீஷ், அவரது சகோதரர் நவீன் ஆகியோரிடம் இருந்து, 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.'அந்த பணம், லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்' என, தேர்தல் பறக்கும் படையினர், போலீசில் புகார் அளித்தனர்.தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ், நவீன் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து, கோவையில் ஆர்.எஸ்.சேகர் வீட்டிற்குச் சென்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அதன்பின், சென்னை எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில் ஆஜரான தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகத்திடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். இதன்பின், எஸ்.ஆர்.சேகருக்கு, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக, 'சம்மன்' அனுப்பினர். அதை ஏற்று, எஸ்.ஆர்.சேகர். சென்னை எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில், நேற்று ஆஜரானார். அவரிடம், போலீசார் எட்டு மணி நேரம் விசாரித்து, வாக்குமூலம் பெற்றனர்.விசாரணைக்குப் பின், எஸ்.ஆர்.சேகர் அளித்த பேட்டி: பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த, 4 கோடி ரூபாய் விவகாரத்தில், எனக்கு தொடர்பு இருப்பது போல, போலீசார் 190 கேள்விகள் கேட்டனர். அதில், பெரும்பாலானவை ஏற்கனவே என்னிடம் கேட்கப்பட்டவை. அதற்கெல்லாம் ஏற்கனவே பதில் அளித்து விட்டேன். அந்த 4 கோடி ரூபாய்க்கும், எங்கள் கட்சிக்கோ, எனக்கோ எந்த தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் ஆணித்தரமாகக் கூறி உள்ளேன்.பா.ஜ., மீது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக, தி.மு.க., அரசு தரப்பில், ஒரு விஷயத்தை அவர்களாகவே உருவாக்கி உள்ளனர். அதற்கு உருவம் கொடுத்து, அதை எங்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர். தி.மு.க., அரசின் கதைக்கு, நாங்கள் வசனம் எழுத முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mohamed Raffi
ஜூலை 13, 2024 13:55

நாலு கோடி யார் பணம்? சொல்லுங்க


Azad
ஜூலை 13, 2024 11:26

2 கண்டனர் பணத்தையே கரெக்டா கணக்கு ஆட்டைய போட்ட கம்மனாட்டி நீங்க ஜெயலலிதாவோட பணத்தை இவ்ளோ பெரிய பசங்க சார் நீங்க


Iyeluswamy Chinnasamy
ஜூலை 13, 2024 09:18

அப்படியானால் கதையை நீங்களே எழுதி விடுங்கள்.


Sridhar
ஜூலை 12, 2024 11:24

அப்போ அந்த நாலு கோடி பணம் யாருடையது? திராவிட மாடேல் ஆட்சியில எவ்வளவு செழிப்பு பாருங்க ஓடற ரயில்ல கோடி கோடியா பணம் இருக்குது, அத சொந்தம் கொண்டாடுறதுக்கு கூட ஆளு இல்ல


MADHAVAN
ஜூலை 12, 2024 11:21

பிஜேபி காரனுங்க பண்ணும் தில்லு முள்ளு அதிமுக காரனுங்களை மிஞ்சி உலகத்துக்கே முன் உதாரணமாக இருக்கு,


rsudarsan lic
ஜூலை 12, 2024 10:29

4 கோடி எங்கிருந்து கிளம்பியது என்று கண்டுபிடிக்க முடியாத CBCID . பேசாமல் ஒவ்வொரு கட்சியும் தனியார் மூலம் துப்பு அறியும் ஏற்பாடுகள் செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்கலாம்


Sampath Kumar
ஜூலை 12, 2024 10:11

யாரு வசனம் எழுத சொன்னது வந்து நடி நடித்து கொடுத்து போய்விட்டன இப்போ வந்து வசனம் பற்றி உள்ளரதே


cbcccid
ஜூலை 12, 2024 07:06

ஈரோடு, திருமங்கலம் ஃபார்முலா எப்போ விசாரிப்பது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை