உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடுகள் கட்ட வாரியம் தயார்; நிலம் கிடைப்பதில் தான் பிரச்னை

வீடுகள் கட்ட வாரியம் தயார்; நிலம் கிடைப்பதில் தான் பிரச்னை

சென்னை : ''வீட்டுவசதி வாரியத்திற்கு வீடு கட்டுவதில் எந்தவித தயக்கமும் இல்லை. நிலம் எடுப்பதில் தான் பெரும் பிரச்னை உள்ளது,'' என, வீட்டுவசதி வாரிய அமைச்சர் முத்துசாமி கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - ஜெயகுமார்: பெருந்துறையில், 2,700 ஏக்கரில், சிப்காட் தொழில் நகரம் சிறப்பாக இயங்கி வருகிறது. கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, அரசுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு வீட்டுவசதி வாரியம் வாயிலாக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தர வேண்டும்அமைச்சர் முத்துசாமி: அது, அரசுக்கு சொந்தமான நிலம். அரசு நிலங்களில் கட்டப்படும் கட்டடங்களை, அரசு அலுவலர்கள் வாடகை குடியிருப்பாக மட்டுமே பயன்படுத்த முடியும்.வீட்டு வசதி வாரியம் நேரடியாக எடுக்கும் இடங்களில் மட்டுமே வீடு கட்டி, மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முடியும். இந்த இடம் குறித்து, வருவாய் துறையிடம் பேசி, அவர்கள் கொடுத்தால், அரசு அலுவலர்கள் வாடகை குடியிருப்புகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யலாம்.ஜெயகுமார்: பெருந்துறையில் எட்டு பேரூராட்சிகள் உள்ளன. இங்கு ஒரே வீட்டில் நான்கு, ஐந்து குடும்பங்கள் வசிக்கின்றன. ஒவ்வொரு பேரூராட்சியிலும் 1,000 வீடுகள் கட்டி, அமைச்சர் புரட்சியை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.அமைச்சர் முத்துசாமி: நிலம் எடுப்பதில் தான் பெரும் பிரச்னை உள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு வீடு கட்டுவதில் எந்தவித தயக்கமும் இல்லை. இடம் கிடைப்பது சாதாரணமான விஷயம் இல்லை.பெருந்துறையில் இடம் கிடைத்தால், அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. எம்.எல்.ஏ., இந்த அளவிற்கு சொல்வதால், அங்கு இடம் கிடைக்குமா என ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ethiraj
மார் 26, 2025 07:36

All TNHB flat or land transferred to individuals with patta and sale deed though they may be poor. Any govt funded project must be given to beneficiary on 25 year lease only. This is followed by singapore govt.


Gajageswari
மார் 25, 2025 05:33

நில வழிகாட்டி மதிப்பு உயர்த்த வேண்டும்.


Kasimani Baskaran
மார் 25, 2025 03:56

சந்தை மதிப்பில் பத்தில் ஒரு பகுதி கொடுத்து அபகரிக்க வழி இருக்கிறது என்பதற்காக எல்லோரும் விட்டுக்கொடுத்து விடுவார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை