உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியாருடன் இணைந்து சோலார் பார்க் ஆணையத்திடம் அனுமதி கேட்கும் வாரியம்

தனியாருடன் இணைந்து சோலார் பார்க் ஆணையத்திடம் அனுமதி கேட்கும் வாரியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தனியாருடன் இணைந்து, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் தலா, 15 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், மின் வாரியம் அனுமதி கேட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த, 10 ஆண்டுகளில், 20,000 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின்சார பூங்கா மற்றும் 10,000 மெகா வாட்டில் மின்சாரத்தை சேமிக்கும், 'பேட்டரி ஸ்டோரேஜ்' கட்டமைப்பு வசதி ஏற்படுத்த, 2022 - 23ல் மின் வாரியம் முடிவு செய்தது. முதல் கட்டமாக, அந்த ஆண்டில், 2,000 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின்சார பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருவாரூர், காஞ்சிபுரம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 3,000 ஏக்கருக்கு மேல் இடம் கையகப்படுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின், பி.பி.பி., எனப்படும் பொது - தனியார் கூட்டு முயற்சியில், திருவாரூர் மற்றும் கரூரில் தலா, 15 மெகா வாட் திறனில் சூரி யசக்தி மின் நிலையங்களை, பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்பு வசதியுடன் அமைக்க, பசுமை எரிசக்தி கழகம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, தற்போது ஒழுங்குமுறை ஆணையத்திடம், பசுமை எரிசக்தி கழகம் அனுமதி கேட்டுள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்படும்; மின் நிலையம் அமைய உள்ள இடத்தை பசுமை எரிசக்தி கழகம் வழங்கும். அங்கு, தனியார் நிறுவனம் தன் செலவில் மின் நிலையங்களை அமைக்கும். அதனிடம் இருந்து, 25 ஆண்டு களுக்கு மின் வாரியம் மின்சாரம் கொள்முதல் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

c.mohanraj raj
ஜூலை 22, 2025 14:42

இதில் மின்சார வாரியத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது அனைத்து ஊழல் மையம் அதுவும் இந்த அரசியல் கேட்க வேண்டும் சாதாரண வீட்டு சர்வீஸ் ஒன்றுக்கு 1500 ரூபாய் பிளஸ் லஞ்சம் 500 2100 ஆக இருந்தது தற்போது 6 ஆயிரம் ரூபாய் சர்வீஸ் வயர் மாற்ற முன்பு 300 ரூபாய் தற்பொழுது 900 ரூபாய்


Jack
ஜூலை 22, 2025 14:00

நேரு பாலாஜி போன்றோர்கள் சோலார் மின்சார துறையில் ஈடுபட்டுள்ளதாக சொல்கிறார்கள் ..மகாராஷ்டிராவில் காற்றாலை அமைத்த கிராமங்களில் வரவேண்டிய காற்றை காற்றாலைகள் திசை திருப்பிவிடுவதாக போராட்டம் நடத்தினார்கள்


prakash m
ஜூலை 22, 2025 13:44

Collection


SUBBU,MADURAI
ஜூலை 22, 2025 07:29

Solar Power capacity in India 2014 : 2.6 GW. 2025 : 110 GW A Staggering 4500% increase in solar power installed capacity.


suresh Sridharan
ஜூலை 22, 2025 06:34

சோலார் பேனல் இங்க இருக்கு தரிசி நிலங்களில் விதைத்தால் நிழல் பயிர்கள் விதைக்கவும் முடியும் அரசு தான் முடிவு


Senthoora
ஜூலை 22, 2025 05:57

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் சும்மாயிருக்கும் தனியார் நிலங்களில் போ சோலார் Farm அமைத்து மின்சாரத்தை அரசுக்கு விடுகிறார்கள்., அரசும் அதுக்கு லோன் கொடுக்குது, அதையே இந்தியாவில் இருக்கும் தரிசு நிலங்களில் செய்ய ஊக்குவித்தால் மிசாரத்திட்டுப்பாடு வராது.


prakash m
ஜூலை 22, 2025 13:45

காலெக்ஷன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை