உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / படகுகள் பராமரிப்பு ராமேஸ்வரத்தில் துவக்கம்

படகுகள் பராமரிப்பு ராமேஸ்வரத்தில் துவக்கம்

ராமேஸ்வரம்: மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை தமிழகத்தில் விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர்.இந்த 61 நாட்கள் தடையில் விசைப்படகில் இன்ஜின், மரப் பலகைகள் சேதமடைந்திருந்தால் பழுது நீக்குவர். அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் தடைக்குமுன் கடைசி நாளான நேற்று 320 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். இருப்பினும் எஞ்சிய 380 படகுகளின் நேற்று முதல் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கடற்கரையில் நிறுத்தினர். இதில் சில படகுகளை பராமரிப்பு பணி செய்வதற்காக கரையில் ஏற்றினர்.இன்று ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்று நாளை கரை திரும்புவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ