உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பிரச்னை புரோட்டான் சேவையை முடக்க பரிசீலனை

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பிரச்னை புரோட்டான் சேவையை முடக்க பரிசீலனை

சென்னை:சென்னையில் உள்ள, 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, 'புரோட்டான்' நிறுவனத்தின் 'இ - மெயில்' சேவையை, நம் நாட்டில் தடை விதிக்க பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.சில தினங்களுக்கு முன், சென்னையில், நந்தம்பாக்கம், கோபாலபுரம் என, பல இடங்களில் செயல்படும், 13 தனியார் பள்ளிகளுக்கு, 'இ - மெயில்' வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட, இ - மெயில் முகவரியை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர்கள், சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாக செயல்படும், 'புரோட்டான்' நிறுவனத்தின் இ - மெயில் சேவையை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.இதை தொடர்ந்து மர்ம நபர்களை கைது செய்ய, வெடிகுண்டு மிரட்டல் விடுக்க பயன்படுத்தப்பட்ட கருவி எது, 'ஐபி' அட்ரஸ் மற்றும் எந்த இடத்தில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை கேட்டு, புரோட்டான் நிறுவனத்திற்கு, இ - மெயில் வாயிலாக கடிதம் அனுப்பினர்.ஆனால், அந்த நிறுவனம் பதில் அளிக்க மறுத்து விட்டது. இது குறித்து, தமிழக சி.பி.சி.ஐ.டி., போலீசார், மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினர்.புரோட்டான் நிறுவனம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதால், நம் நாட்டில் அந்த நிறுவனத்தின் சேவையை முடக்குவது பற்றி மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, புரோட்டான் நிறுவனத்திற்கும் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.'எங்கள் நாட்டு சட்டப்படி, வெளிநாட்டு விசாரணை அமைப்புகளுக்கு எங்களால் நேரடியாக பதிலளிக்க முடியாது. எங்கள் நாட்டு அதிகாரிகள் தேவையான உதவிகளை அளிப்பர்' என, புரோட்டான் நிறுவனம் தெரிவித்து இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை