உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை தீவிரம்

தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை தீவிரம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்திற்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை காலை 9.30க்கு தொடங்குகிறது; கவர்னர் உரைக்குப் பின் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்கிறது. இந்நிலையில் இன்று (ஜன.,05) தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்திற்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் புரளி என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜன 05, 2025 11:42

தமிழகத்தில் நடக்கும் பல பிரச்சினைகளை திசை திருப்ப, குறிப்பாக அந்த அண்ணா பல்கலை வளாகத்தில் சமீபத்தில் ஒரு மாணவிக்கு நடந்த பாலியல் குற்றத்தை மறைக்க, இப்படி வெடிகுண்டு மிரட்டல் செய்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதில் திமுக அரசு பலா கில்லாடிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை