உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனிமொழி, அமைச்சர் வீடுகளுக்கு குண்டு மிரட்டல்

கனிமொழி, அமைச்சர் வீடுகளுக்கு குண்டு மிரட்டல்

துாத்துக்குடி : துாத்துக்குடி லோக்சபா எம்.பி., கனிமொழியின் வீடு துாத்துக்குடி குறிஞ்சிநகரில் உள்ளது. தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவனின் வீடு போல்பேட்டை பகுதியிலும் உள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று பேசிய நபர், கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பைதுண்டித்துவிட்டார்.இதையடுத்து, இருவர் வீடுகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சோதனையில் சந்தேகப்படும்படியாக எந்தவித பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 28, 2025 11:52

ஓசி சரக்கு கிடைக்காதவன் எவனாவது அந்த மிரட்டலை விடுத்திருப்பான். இப்பவாவது கனிமொழி பூரண மதுவிலக்கு கொண்டுவருவாங்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை