உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உள்பட பல்வேறு இடங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழக்கு விஷயமாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, சென்னை தீவுத்திடலில் உள்ள ராணுவ அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற பதிவாளரின் இமெயிலுக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து, நீதிமன்ற பணியாளர்களை வெளியே அனுப்பி விட்டு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.இதனால் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
செப் 26, 2025 17:16

இது தான் விடியலின் ஆட்சியின் பொர்காலம். வெடிகுண்டு மிரட்டல் பொஆதியய் கலாச்சாரம் கற்பழிப்புகள் கொலை கருவூல கொள்ளை.


சிந்தனை
செப் 26, 2025 16:19

செய்யிற பாவத்துக்கு ஏதாவது தண்டனை கிடைத்தால் பரவாயில்லை சும்மா பூச்சாண்டி காட்டுகிறது எப்படி? இவரெல்லாம் என்ன கடவுளோ தெரியல...


சிந்தனை
செப் 26, 2025 16:14

நம்ம ஊரு நீதிபதிகள் எல்லாம் மிகப்பெரிய தியாகிகள் வெடிகுண்டே வெடித்தாலும் பணியில் விடுமுறை போடாமல் இருப்பார்கள் இவர்களெல்லாம் சுதந்திரப் போராட்ட வீரர்களை போல மிகப் பெரிய தியாகிகள் இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது


கடல் நண்டு
செப் 26, 2025 14:56

ஒங்கோல் குடும்பத்துக்கு வரவே வராது ..… பெரும்பாலும் அவங்க 200 உவா கொத்தடிமைகள் செய்யும் மடைமாற்றும் யுக்தியாக இருக்கும்..


Anantharaman Srinivasan
செப் 26, 2025 12:59

இதுபோல் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருகிறதே. பிடிபடும் நபர்களுக்கு என்ன தண்டனை தரப்படுகிறது. ? தண்டனை கடுமையாகயிருந்தால் தான் பயம் வரும்.


தியாகு
செப் 26, 2025 12:55

அதுல பாருங்க திருடர்கள் அதிகம் நிறைந்திருக்கும் அறிவாலயத்திற்கு ஒரு வெடிகுண்டு மிரட்டலும் வரமாட்டேங்குது, திருடர்களுக்கு தண்டனை கொடுக்கும் கோர்ட், மக்களை காப்பாற்றும் ஆஸ்பத்திரி, குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் இவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. டுமிழர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் டுமிழர்களுக்கென்று ஒரு தனி குணம் உண்டு என்பார்களே, அது இதுதானோ?


nagendhiran
செப் 26, 2025 12:23

விடியல்?ஆட்சியிலா இப்படி?


Ramesh Sargam
செப் 26, 2025 11:49

சமீப நாட்களாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கொட்டுமேல் கொட்டு வைக்கிறது. அதில் பாதிக்கப்பட்ட திமுக சொந்தங்கள்தான் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்திருக்கவேண்டும். அல்லது எப்பொழுதும்போல எவனாவது ஒரு டாஸ்மாக் குடிமகன் போதையில் விடுத்திருப்பான்.


ராமகிருஷ்ணன்
செப் 26, 2025 11:46

வக்கீல்களுக்கு போலீஸ் அடி பழைய சாதனை. வெடிகுண்டு மிரட்டல் புதிய விடியல் சாதனை, கல்வெட்டுகளில் பொறித்து வைக்கவும்


முக்கிய வீடியோ