உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையில் பூணுால் அறுப்பு: பிராமண சமாஜம் கண்டனம்

நெல்லையில் பூணுால் அறுப்பு: பிராமண சமாஜம் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பழனி: தமிழ்நாடு பிராமண சமாஜ நிறுவன மாநிலத்தலைவர் ஹரிஹரமுத்து ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருநெல்வேலி தியாகராஜநகர் பகுதியில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவரது மகனை பூணுால் அணிந்து வரக்கூடாது என மிரட்டி, பூணுாலை வலுக்கட்டாயமாக இழுத்து அறுத்த அடையாளம் தெரியாத நபர்களின் செயலை, தமிழ்நாடு பிராமண சமாஜம் வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பூணுாலை அறுப்பது கோழைத்தனமான செயலாகும்.பூணுால் ஹிந்து சமூகத்தில் பிராமணர்கள் மட்டும் அல்லாது பல சமூகத்தினராலும் புனிதமாக போற்றப்படுவதாகும். அவ்வாறான பூணுாலை அறுப்பது மத உணர்வுகளை புண்படுத்தும். மேலும் பாரதிய நியாய சம்ஹிதா பிரிவுகள் 196, 298 மற்றும் 299-களின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய செயல் எங்கள் சமூகத்திற்கு மட்டுமின்றி பூணுால் அணியும் இதர சமூகத்தினர் இடையேயும் அச்சத்தையும், பீதியையும், ஏற்படுத்தி உள்ளது.இத்தகைய செயல் சமுதாயத்தில் விரோத உணர்ச்சிகளை துாண்டிவிடும் விதத்திலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரீதியிலும் உள்ளது. பிராமண சமூகம் சட்டத்தை மதித்து மத நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் விரும்பி பேணிப்பாதுகாக்கிறது.ஆனால், இச்சமூகத்தை தாக்குவதையே பிரிவினைவாதிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். அனைத்து சமூகங்களை போன்று பிராமண சமூகத்தையும் காப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை, பொறுப்பு. போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்கள் மீது தக்க சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இந்த பூணுால் அறுப்பு சம்பவத்தை, தமிழக பா.ஜ.,வும் வன்மையாக கண்டித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Lakshmi Shrinivasan
செப் 24, 2024 11:57

இந்த படு பாவிகள் அராஜகம் என்று தான் ஒழியுமோ?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 23, 2024 14:35

இது சரி என அரசு சொன்னால் முஸ்லிம்கள் சுன்னத் செய்யக் கூடாது என அரசு சொல்ல வேண்டும். கிறிஸ்துவர்கள் சிலுவை அணியக்கூடாது என்று சொல்ல வேண்டும். முடியுமா அரசால். வெட்கம் மானம் ரோசம் இல்லாமல் ஆயிரம் ரூபாய் இலவச பேருந்து இலவச பொங்கல் பரிசு வேஷ்டி சேலை ஆசைப் படும் இந்துக்களும் அவா பையன் கலெக்டர் ஆக்கும் என சொல்லி கொண்டு திரியும் பிராமணர்கள் கலெக்டராக திமுக அதிமுக அரசுகளில் கைகட்டி சேவகம் செய்யும் கலெக்டர்கள் அரசு அதிகாரிகள் பார்த்து திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்கும் பிராமணர்கள் கிருஷ்ணா ராமா கோவிந்தா என்று கோயில்களில் பஜனை பாடிக் கொண்டு நமக்கேன் வம்பு என்று கோயிலேயே முடங்கி போன பெரியவர்கள் என சொல்லி கொண்டு இருக்கும் இந்துக்கள் சிவனே கதி என்று கிடக்கும் சிவனடியார்கள் எங்க பையன் அமெரிக்காவிலே நாலு இலட்சம் வாங்கி கொண்டு உள்ளான் எம் பொண்ணு இலண்டன் டாக்டர் நேத்து தான் இருக்கட்டுமேனு ஒரு என்பது இலட்சம் பிளாட் வாங்கி போட்டுட்டு இன்னைக்கு பிளைட் ஆஸ்திரேலியா போயிட்டான் என பினாத்தி கொண்டு திரியும் இந்துக்கள் ஓட்டு போடுறதுக்கு எவனப்பா லைன்லே நிற்கிறது என சலித்து கொள்ளும் இந்துக்கள் ஓட்டு போட லீவு விட்டால் சுற்றுலா செல்லும் இந்துக்கள் இது மாதிரியான வர்கள் உள்ளவரை இந்துக்களை வேற்று மதத்தினர் அவமானப்படுத்தி கொண்டு தான் இருப்பார்கள்.


S. Neelakanta Pillai
செப் 23, 2024 13:32

அடையாளம் தெரியாத நபர்களாம், காவல்துறை கண்ணாமூச்சி விளையாடுகிறது. குற்றவாளியை கைது செய்யவில்லை என்று சொன்னால் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு அறவே இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகிவிடும்


vbs manian
செப் 23, 2024 09:55

அநாகரீகத்தின் உச்சம். இதை இந்தியா முழுதும் கொண்டு செல்ல வேண்டும். பொற்கொல்லர் தச்சர் விஸ்வகர்ம வகுப்பினர் என்று பலரும் அணிகின்றனர். பல வகுப்பினரையும் அவமதிக்கும் செயல் காழ்ப்புணர்ச்சி வக்கிரம்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 23, 2024 09:19

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் காட்பாடி அரசர் அமைச்சர் லார்டு முருகா பிராமணர்களைப்பாற்றி வாய் திறந்திருந்தார்.


Rajarajan
செப் 23, 2024 09:17

அட கிறுக்கு பிடித்த ..., திராவிட முட்டாள்கள் நினைப்பு தவறு. பிராமணரின் முன்னேற்றம் அவர்களது சிகை, பூணூலில் இல்லை. அது அவர்களின் ஒரு சம்ப்ரதாயம் மட்டுமே. அவற்றை அறுப்பதால், அவர்களின் கல்வி, திறமை, முன்னேற்றம் என்றும் தடைபடாது. வேண்டுமானால், நீங்களும் அவர்களைப்போல படித்து, திறமையை மெருகேற்றி முன்னேறுங்கள். உங்கள் ராஜகுரு ஈரோட்டார் மற்றும் அவர் பெயரை சொல்லி பிழைக்கும் அடிமை மற்றும் அடிவருடிகளை நம்பி இதுபோன்று தொடர்ந்தால், உங்களுக்கு தனியார் நிறுவனம் வேலை வழங்காது. பின்னர் அடிவருடிகளுக்கு வெண்சாமரம் வீசி, உங்கள் வயிற்றுபிழப்பை நடத்தவேண்டி வரும். இனி எதிர்காலம் பெரும்பாலும் தனியார்மயம் தான். எனவே உங்கள் எதிர்காலம் சங்கு தான். இப்போதாவது உங்கள் தலைவர்களை புறம்தள்ளி முன்னேறுங்கள். இல்லையேல் காலம் உங்களை திருத்தும். காலம் போனபின்னர் வருந்தி பயன் இல்லை. அடிமைத்தனத்திலிருந்து வெளியே வாருங்கள்.


subramaniabharathi s
செப் 23, 2024 10:26

I respect Brahmins. Very disciplined people.


Nandakumar Naidu.
செப் 23, 2024 07:41

பிராமணர் வன் கொடுமை சட்டம் அல்லது ஹிந்து வன் கொடுமை சட்டம் என்று கொண்டு வர வேண்டும். ஹிந்துக்களுக்கும், பிராமணர்களுக்கும் எதிராக ஹிந்து விரோத ஓநாய்களின் வன்முறை அதிகமாகி விட்டன.


sankaranarayanan
செப் 23, 2024 07:38

பிராமண சமூகத்தையும் காப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை, பொறுப்பு. இதுவரை இந்த நியூகழ்ச்சியைப்பற்றி தினமலரைத்தவிர வெறி எந்த ஒரு ஊடகமும் கட்சியும் முன்வந்து கண்டிக்கவே இல்லை ஏனிப்படி இதுதான் ஜநாயகமா அவர்கள் ஒதுங்கி சென்று அவர்கள் தங்களுடனுய வேலைகளை மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் செய்து கொண்டிருக்குபோது அவர்களை தீண்டிப் பார்க்கிறார்கள் இந்த விஷ கிருமிகளை, அரசு உடன் தலையிட்டு இந்த அராஜகத்தை கொடும்செயலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் அதுதான் அரசின் சிறந்த ஆட்சி


sankaran
செப் 23, 2024 07:36

பிராமணன் ஒரு nightmare ... திராவிட கூலிகளுக்கும் அவர்கள் பின்னால் இருக்கும் மதமாற்றி முதலாளிகளுக்கும் ...


Ganesun Iyer
செப் 23, 2024 07:35

இத உடுங்க, அவங்க பாத்துபாங்க.. தண்ணி தொட்டில நெருப்பை கலந்தவன் விஷயத்தில் அக்கறை இருந்தா ஸ்டாலின் கிட்ட சொல்லி கலந்தவனை கண்டுபிடிக்க சொல்லுங்க..


புதிய வீடியோ