உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிராமணர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம் 

பிராமணர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம் 

கோவை: பிராமணர்களை இழிவாக விமர்சிப்பவர்களுக்கு எதிராக, தகுந்த பி.சி.ஆர்., சட்டம் இயற்ற வலியுறுத்தி, அனைத்து பிராமணர் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்நடந்த ஆர்ப்பாட்டத்தில்,அனைத்து பிராமணர் சங்க கூட்டமைப்பு தலைவர் பாலசுப்ரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் பிராமணர்களை இழிவுபடுத்துவதும், பூணுாலை அறுப்பதும், திரைப்படங்களில் கிண்டலாக சித்தரிப்பதும் தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இழிவுபடுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்ய, சிறப்பு பி.சி.ஆர்., சட்டம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு பேசினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் இ.ம.க., தலைவர் அர்ஜுன் சம்பத், பிராமணர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளாவை சந்தித்து, தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்தனர்.இதற்கிடையே, நவ., 3ல் சென்னையில் நடக்கும் ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலத்திற்கு தமிழ்நாடு பிராமண ஸமாஜம் ஆதரவு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

J.V. Iyer
அக் 08, 2024 03:40

இனி யூதர்ககளைப்போல கையில் கத்தி எடுத்தால்தான் எதுவும் நடக்கும். நல்லவனாக இருந்தால் மேலே ஏறி மிதிப்பார்கள் இந்த கேவலமான மக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை