உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமா? 9445257000 என்ற எண்ணில் புகார் தரலாம்! வாணிப கழக இயக்குனர் அதிரடி அறிவிப்பு

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமா? 9445257000 என்ற எண்ணில் புகார் தரலாம்! வாணிப கழக இயக்குனர் அதிரடி அறிவிப்பு

சென்னை: 'நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்தால், ஆதாரத்துடன் தனது மொபைல்போன் எண்ணிற்கு புகாரை அனுப்பலாம்' என, தமிழக நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சண்முகசுந்தரம் அதிரடியாக அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:அரசு சார்பில் மாநிலம் முழுதும் 2,600 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் செயல்படுகின்றன. தினமும், 12,800 விவசாயிகளிடம் இருந்து, 60,000 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. சில நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வருகின்றன.இதைத்தடுக்க, சென்னையில் உள்ள, தமிழக நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உழவர் உதவி மையம் துவக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை, 18005993540 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விவசாயிகள் புகார் அளிக்கலாம்.அத்துடன், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உள்ள, மண்டல மேலாளர், முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்டோரின் மொபைல் போன் எண்களை தொடர்பு கொண்டும், விவசாயிகள் புகார்கள் தெரிவிக்கலாம்.தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தில், கூடுதல் பதிவாளர் நிலையில், பிரத்யேக கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அவரது கட்டுப்பாட்டின் கீழ், எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.ஒவ்வொரு குழுவிலும், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். புகார்கள் அடிப்படையில், இக்குழு தொடர்புடைய மாவட்டங்களுக்கு சென்று, உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.புதுக்கோட்டை கரம்பக்குடி, விலாப்படி, தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, இலுப்பைவிடுதி ஆகிய இடங்களில், பணியாளர்கள் லஞ்சம் பெறுவதாக புகார்கள் வந்தன. அதுபற்றி குழு விசாரித்து, உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.தற்காலிக பணியாளர்கள் மீது புகார்கள் எழுந்து, உண்மை கண்டறியப்பட்டால், உடனுக்குடன் அவர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவர். நிரந்தர பணியாளர்களை பொறுத்தவரை, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி, மேல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.எனவே, யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. புகார் இருந்தால், தமிழக நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனரின் 9445257000 என்ற மொபைபோன் எண்ணுக்கு, 'வாட்ஸ் ஆப்' வழியாக மட்டும் புகார்களை அளிக்கலாம். புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்கள் அல்லது வீடியோ இருந்தால் அவற்றையும் பதிவிடலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ராமகிருஷ்ணன்
பிப் 17, 2025 13:50

கண் துடைப்பு நாடகம்


ஆரூர் ரங்
பிப் 17, 2025 11:12

பாட்டிலுக்கு பத்து போல மூட்டைக்கு 40 ரூபாய் பிடுங்கிக் கொள்கிறார்கள். அதுவும் மழை வரும் அறிகுறி வந்தால் ரேட் டபுள் ஆகும். இதெல்லாம் திராவிட மாடல் கண்டுபிடித்த டெக்னிக்.


rama adhavan
பிப் 17, 2025 09:51

இது திருடன் கையில் வீட்டு சாவியை தருவதற்கு சமம்.


baala
பிப் 17, 2025 09:40

நீங்கள் எதுவும் செய்ய இயலாது. அதுதான் உண்மை. நீங்கள் எல்லாம் ஒன்றுமே செய்ய மாட்டீர்கள் என்பது மக்களுக்கு தெரியும்.


கூமூட்டை
பிப் 17, 2025 08:06

எந்த நம்பகமான முறைகள் இல்லை. எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும். வாழ்க ஊழல்வாதிதக்காளி


Kasimani Baskaran
பிப் 17, 2025 07:15

லஞ்ச ஒழிப்புத்துறையை அணுகினால் ஒன்றும் நடக்காது என்று நினைத்து விட்டார் போல.


TMM
பிப் 17, 2025 06:56

வாணிபக்கழக இயக்குநருக்கு ஏழரை சனி ஆரம்பம்


Varadarajan Nagarajan
பிப் 17, 2025 06:43

"ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்" என்றால் தற்பொழுது வாங்கும் லஞ்சத்திற்கு ரசீதா கொடுக்கின்றார்கள்? லஞ்சம் இல்லாமல் நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமல்ல வேறு எந்த அரசு அலுவலகங்களில் வேலை நடக்கின்றது? விஜிலென்ஸ் துறை என்ன செய்துகொண்டுள்ளது? நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மட்டும் லஞ்சம் பெறுவதில்லை. சாக்கு பண்டல்களை கொண்டுவருவத்திலிருந்து, கொள்முதல் செய்யும் எடை, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை ஏற்றிச்செல்வதுவரை அனைத்திலும் ஊழல். இது எதுவுமே அதிகாரிகளுக்கு தெரியாதது போலவும், ஊழலில் பங்கு இல்லாதது போலவும் செய்தி வெளியிடுவது நகைப்புக்குரியதாக உள்ளது


இறைவி
பிப் 17, 2025 06:40

புகார் கொடுத்தவன் நெல் பதினைந்து நாட்கள் வாங்கப்படாமல் காயும். எடை குறையும். அதன் பின்னும் ஈரப்பதம் அதிகம் என்று காய வைக்க சொல்வார்கள். பின்னர் எடை போடும்போதும் ஈரப்பதம் அதிகம் என்று காரணம் காட்டி விலை கழித்தம் செய்யப்படும். இரண்டு வாரம் தானாக காய்ந்த எடை இழப்பு, பின்னர் காய வைக்க கொண்டு போன, காய வைத்தபின் கொண்டுவந்த வண்டி கூலி, ஆள் கூலி, பின்னர் ஈரப்பதம் கழிவு எல்லாவற்றையும் கூட்டினால், அவர்கள் கேட்ட லங்சத்தைவிட இரண்டு பங்கு நஷ்டமாகி இருக்கும். திராவிடியா அரசு.


Venkatesan Ramasamay
பிப் 17, 2025 09:52

சரியாய் சொன்னீர்கள். திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ....எல்லா பயலுமே கூட்டு களவாணிகள் .....


ram
பிப் 17, 2025 04:04

DMK இருக்கும் வரை இதெல்லாம் ஒரு செய்தி அவ்வளவுதான். செயல்பாட்டுக்கு வராது..


Kasimani Baskaran
பிப் 17, 2025 10:07

செய்தி கூட தீம்க்கா அடிமை ஊடகங்கள் வெளியிடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை