உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரப்பதிவுக்கு லஞ்சமா? இ - மெயிலில் புகார் தரலாம்

பத்திரப்பதிவுக்கு லஞ்சமா? இ - மெயிலில் புகார் தரலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சார் பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்கப்பட்டால், புகார் தெரிவிக்க மொபைல் போன் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இதுகுறித்து, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அறிக்கை:தினமும், 10 ஆயிரம் ஆவணங்கள் பதியப்படுகின்றன. ஆவணங்களை பதிவுக்கு எடுத்து வரும் பொது மக்கள், அரசு கட்டணங்களை, 'ஆன்லைன்' வழியாக மட்டுமே செலுத்த முடியும். எனவே, கையில் பணம் கொண்டு வர தேவையில்லை.இடைத்தரகர்களால் மக்கள் ஏமாற்றப்படக் கூடாது என்பதற்காக, இடைத்தரகர்களோ, ஆவண எழுத்தர்களோ, சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படக் கூடாது என, கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.எனவே, ஒவ்வொரு ஆவணத்திற்கும் பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுவது ஆதாரமற்ற புகார். மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆண்டுக்கு, 10,000 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டி வந்த பதிவுத்துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்ததால், கடந்த ஆண்டு வருவாய், 17,297 கோடி ரூபாயை எட்டியுள்ளது.பதிவுத்துறை மீது களங்கம் கற்பிக்கும் வகையில், உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்படுவது, முற்றிலும் ஆதாரமற்ற உள்நோக்கம் கொண்ட செயல். இடைத்தரகர்களோ, ஆவண எழுத்தர்களோ, சார் பதிவாளர்களோ, அதற்கு மேல்நிலை அலுவலர்களோ, ஆவணப் பதிவுக்காக லஞ்சம் கேட்டால், 94984 52110, 94984 52120, 94984 52130 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.அமைச்சரின் பெயரிலோ அல்லது அதிகாரிகளின் பெயரிலோ லஞ்சம் கேட்டால், tn.gov.inஎன்ற இ - மெயில் முகவரியில், பதிவுத் துறை செயலருக்கு நேரடியாக புகார் அனுப்பலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

V Pasupathi
ஜன 10, 2024 05:10

Corruption Startup STAGE IN SRO OFFICE ....FULL OF FRAUD DEPARTMENT...


Hari
ஜன 09, 2024 18:12

எல்லா காலாவணிகளும் தி மு கோவில் பாவம் தமிழன் அதில் இந்த மூர்த்தி இருக்கானே அய்யகோ பத்தாயிரம் பெருமானை இடத்திற்கு இப்போது ஒரு லட்சம் பதிவூ கட்டணம் போட்டுவிடடான் பாவிப்பய


MURUGAPPAN
ஜன 09, 2024 16:32

லஞ்சட்டைப் பற்றி புகார் கொடுப்பது இருக்கட்டும். சர்வே நம்பரை சரி பார்க்காமல் தவறான னும்பெரில் பத்திர பதிவு செய்யும் ரெஜிஸ்ட்ரார் மற்றும் ஊழியர்களை என்ன செய்வது. சரி பார்ப்பது அவர்கள் கடமை இல்லையா. அவர்கள் மேல் பதிவுத்துறை என்ன நடவடிக்கை எடுக்கும்? எடுப்பார்களா?


vijayaraj
ஜன 09, 2024 16:13

லஞ்சம் வாங்க கொடுக்க சொல்வதே அமைச்சர் தான். ஏன் இதில் நடிப்பு. எப்படி எல்லோரும் புகார் அளித்தால் ஒரு வேலை நல்லது நடக்கும். மேலே கமெண்ட் செய்த்தது போல் நமக்கு ஏன் வம்பு என்று இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.


Hari
ஜன 09, 2024 18:18

பாவம் இன்னும்நீங்க குழந்தைபோல சுடலை மாதரி இருக்கிறீர்களே , இந்த ஆளு தன மக்களுக்கு இருநூறு கோடியில் கல்யாணம் செய்துவைத்துள்ளார் , அதெல்லாம் எங்கிருந்து வந்த பணம்.


ஆரூர் ரங்
ஜன 09, 2024 15:36

சம்பாதித்து விட்டு மேலிட பர்சன்டேஜை???? கவனிக்காமல் விடும் பதிவாளர்களே ஜாக்கிரதை.


JayaSeeli
ஜன 09, 2024 15:23

நல்லா உருட்டுங்க .....


Vikramadithan Renu Gopal Renugopal
ஜன 09, 2024 14:59

லஞ்சம் இல்லா துறை எது? எல்லா துறைகளிலும் லஞ்சம் லஞ்சம் தான்.. அதுவும் பத்திரப்பதிவு, கட்டட வரைபடம் அனுமதிக்கு ஆறு முதல் எட்டு லட்சம் கண்டிப்பாக கொடுத்தல் மட்டுமே அனுமதி


மு.செந்தமிழன்
ஜன 09, 2024 14:45

அமைச்சர்கள் ஒரு விசயத்தில் பொய் சொல்றீங்க என்றால் அதில் மக்கள் நேரடி தொடர்பில் இருக்கக்கூடாது, இருந்தால் நாம் சொல்லும் பொய் எடுபடாது, லஞ்சம் யாரு வாங்குற, எங்க வாங்குறான், யாருக்காக வாங்குறானு எல்லாருக்கும் தெரியும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 09, 2024 14:13

பத்திரத்தின் உள்பக்கம் பென்சிலின் எவ்வளவு வேண்டும் என்று ரெஜிஸ்ட்டிரார் எழுதுவார். டாகுமெண்ட் எழுத்தர் தனியாக வாங்கி 5 மணிக்கு மேல் கொடுப்பார். அப்புறம் ரப்பரை வைத்து குறிப்பை அழிப்பார்கள். எவ்வளவுதான் ரெஜிஸ்ட்டிரார் ஆபீசுக்கு போயிருக்கோம். நம்பிட்டோம்.


lana
ஜன 09, 2024 14:10

நீங்கள் புகார் கொடுத்தால் தான் எவ்வளவு லஞ்சம் வாங்கப்படுகிறது அதில் சரியான பங்கு வருகிரது ஆ என சரி பார்க்க முடியும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை