உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டுமான அனுமதிக்கு லஞ்சம்; தேர்தலால் சதுர அடிக்கு ரூ.10 அதிகரிப்பு

கட்டுமான அனுமதிக்கு லஞ்சம்; தேர்தலால் சதுர அடிக்கு ரூ.10 அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்போரிடம், கட்சி நிதி என்ற பெயரில், சதுர அடிக்கு, 37 ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், சி.எம்.டி.ஏ., என்ற சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., வாயிலாக, கட்டுமான திட்டங்கள், மனைப் பிரிவுகளுக்கு ஒப்புதல்கள் வழங்கப்படுகின்றன. 'ஆன்லைன்' பொது கட்டட விதிகள் அடிப்படையில், ஒற்றை சாளர முறை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கட்டட அனுமதிக்கு அதிகாரிகளை நேரில் சந்தித்து விண்ணப்பிப்பதில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் கூறப்பட்டது. அதனால், விண்ணப்பதாரர்களும், அதிகாரிகளும் நேரில் சந்திப்பதை தவிர்க்கும் வகையில், 'ஆன்லைன்' முறை ஏற்படுத்தப்பட்டது. இணையவழியில் விண்ணப்பித்தால் முறையாக பரிசீலித்து, உரிய காலத்துக்குள் அதிகாரிகள் முடிவை தெரிவிக்க வேண்டும். ஆனால், இதிலும் விண்ணப்பங்கள் மீதான முடிவுகளை பெறுவதில், தாமதம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.குறிப்பாக, கட்டுமான திட்ட அனுமதியில், ஒவ்வொரு தலைப்பிலும் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது, 'ஆன்லைன்' வாயிலாக தெரிவிக்கப்படும். இந்த கட்டணங்களை ஆன்லைன் முறையில் செலுத்தினால் போதும். ஆனால், இதற்கு அப்பால், விண்ணப்பதாரரை தொடர்பு கொண்டு, சதுர அடிக்கு இவ்வளவு என குறிப்பிட்ட தொகை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. ரகசியமான முறையில், இந்த பேரம் நடப்பதாக கட்டுமான துறையினர் கூறுகின்றனர்.

கேள்வி

இது குறித்து, தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தமிழக துணை தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: கட்டுமான திட்ட அனுமதிக்கு விண்ணப்பிப்போரிடம் இருந்து, அதிகாரிகள் தரப்பில் தொடர்பு கொள்ளும் நபர்கள், சதுர அடிக்கு, 30 முதல், 37 ரூபாய் வீதத்தில் பணம் கேட்கின்றனர். இதில், சில மாதங்கள் முன் வரை , சதுர அடிக்கு, 27 ரூபாய் என, வசூலிக்கப்பட்டது. இத்தொகை, 30 ரூபாய் என உயர்ந்தது. தற்போது, 37 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. எதற்காக உயர்வு என விசாரித்தால், தேர்தல் வருவதால், கட்சி நிதிக்காக இத்தொகை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆளுங்கட்சி தேர்தலை சந்திக்க, இப்படி தான் அதிகாரிகள் நிதி வசூல் செய்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது. யார் அனுமதியில் இதுபோன்ற நிதி வசூலிக்கப்படுகிறது என்பது புதிராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ