உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்காள் கணவரை ஆள் வைத்து கொன்ற தம்பி: காதலித்து மறுமணம் செய்ததால் ஆத்திரம்

அக்காள் கணவரை ஆள் வைத்து கொன்ற தம்பி: காதலித்து மறுமணம் செய்ததால் ஆத்திரம்

மேலுார் : கணவர் இறந்த பின், தன் சகோதரி காதலித்து மறுமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தம்பி, தன் நண்பர்களை ஏவி கார் ஏற்றி, அக்கா கணவரை கொலை செய்த சம்பவம் மதுரை மேலுாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுரை மாவட்டம், மேலுார் தும்பைபட்டியை சேர்ந்தவர் ராகவி, 24; பொட்டப்பட்டியை சேர்ந்த உறவினர் செல்வத்தை திருமணம் செய்தார். இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாண்டுகளுக்கு முன் வாகன விபத்தில் செல்வம் இறந்தார். கணவர் வீட்டில், குழந்தைகளுடன் வசித்து வந்த ராகவிக்கு, பக்கத்து வீட்டில் இருந்த உறவினர் சதீஷ்குமார், 21, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qpl2h73n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஜூலையில் ராகவி வீட்டில் இருந்து மாயமானார். அவரது பெற்றோர் மேலுார் போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணையில், சதீஷ்குமாரை திருமணம் செய்து, திருச்சியில் வசிப்பது தெரிந்தது. ராகவியின் பெற்றோர், இருவரையும் சேர்ந்து வாழ வைப்பதாக போலீஸ் ஸ்டேஷனில் கூறி, வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சதீஷ்குமாரை அவரது வீட்டிற்கு அனுப்பி விட்டு, ராகவியை வீட்டுச்சிறையில் வைத்தனர். சில தினங்களுக்கு முன் சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட ராகவி, தான் வீட்டுச்சிறையில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மனைவியை மீட்டு தரும்படி, ஆக., 14ல் மேலுார் மகளிர் போலீசில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். ஆக., 16ல் இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து பேசினர். அப்போது, கணவருடன் திருச்சி செல்வதாக ராகவி கூறியதால், போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். இருவரும் டூ - வீலரில் சென்றனர்.இந்த தகவல், சிங்கப்பூரில் உள்ள ராகவியின் தம்பி ராகுலுக்கு தெரிய வந்தது. அவர், உடனடியாக தன்னுடன் சிங்கப்பூரில் பணியாற்றி, தற்போது சொந்த ஊர் திரும்பிய நண்பர்கள் அய்யனார், அருண்பாண்டி மற்றும் சில உறவினர்களை தொடர்பு கொண்டு, இருவரையும் தீர்த்துக் கட்டும் படி கூறியுள்ளார். இதையடுத்து, மேலுார் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து டூ - வீலரில் ராகவி, கணவருடன் புறப்பட்டார். அவர்களை காரில் பின் தொடர்ந்த ராகுலின் நண்பர்கள், இரவு, 11:30 மணிக்கு அய்யாபட்டி விலக்கருகே டூ - வீலர் மீது காரால் மோதினர். இதில், சதீஷ்குமார், ராகவி தடுமாறி விழுந்தனர். காரில் வந்த நால்வரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ராகவி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். போலீசில் அவர் அளித்த புகாரில், கொலைக்கு காரணமான தம்பி ராகுல், உடந்தையாக இருந்த உறவினர், நண்பர்கள் அய்யனார், அருண்பாண்டி, சரிதா, அழகர், ஆறுமுகம் உட்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இருந்தார். கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, வழக்கில் சம்பந்தப்பட்ட 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் மேலுாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramaraj P
ஆக 18, 2025 07:28

திராவிடர்களா தமிழர்களா இவர்கள்.


Padmasridharan
ஆக 17, 2025 15:22

மனித உயிர்களைவிட பணமும், நகையும் முக்கியாமாகிவிட்டது எல்லோருக்கும். ஒருத்தர ஒருத்தர் விரும்போது மத்தவங்க அவங்களுக்கு நல்லது செய்யாமல் கெட்டது செய்யணும்னுதான் நிறைய பேர் நினைக்கிறாங்க. இதில் காவலர்களும் அடக்கம், கடற்கரையில் வரும் ஆண்_பெண்ணை பிடித்து அநாகரிகமாக அதட்டி பேசி மிரட்டியடித்து பணம்/மொபைல் புடுங்குகின்றனர். வாழறதுக்கு வழி வகுக்காமல் சாகடிப்பதற்கு கூட்டணி கூடுகிறார்கள்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 17, 2025 13:36

கொஞ்சம் யோசித்தால்... பெற்றோர் கணவனை இழந்த பெண்ணைப்பற்றி யோசித்து, அவளுக்கு ஒரு நல்வழி செய்ய வேண்டும் என்று கண்டிப்பாக கவலையுடன் இருந்திருப்பார்கள். பெண் அவசரப்பட்டு தன்னைவிட சிறியவனை தேர்ந்தெடுத்தது தவறு. சில ஆண்டுகளில் சலிப்படைந்து அவன் இவளை விட்டுவிட்டு செல்லும் வாய்ப்புகள் அதிகம். அந்தப் பெண் மீண்டும் தனிமரமாகும் வாய்ப்புகள் அதிகம். பெற்றோர் மகளைவிட வயதில் சற்று பெரிய, மனைவியை இழந்த அல்லது நல்ல புரிதலுள்ள ஒருவருடன் கண்டிப்பாக திருமணம் செய்து வைத்திருப்பார்கள். பெண்கள் அவசரப்படுவதே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. இப்படியும் யோசிக்கலாம்.


saravan
ஆக 17, 2025 13:31

இதுக்கு என்ன பெயர் அளிக்கலாம் ஆனவக் கௌரவ அடாவடிக் கோலை


Santhakumar Srinivasalu
ஆக 17, 2025 13:23

மருமகனை கொன்று மகளை விதவை ஆக்கிய இந்த தகப்பன் சாப்பிட போவது சோறா ...?


M Ramachandran
ஆக 17, 2025 14:23

சிறையில் அரசு கவுரவ விருந்தினராக கழி.


Kovandakurichy Govindaraj
ஆக 17, 2025 16:32

சோத்தை விட கவுரவம் முக்கியம் என்பதால் தான் இந்த கொலை


Senthilkumar ks
ஆக 17, 2025 13:22

இது எதோ ஆதாய கொலை என்று தோன்றுகிறது, மகள் சொத்தை அபகரிக்க அப்பா செய்த கொலை இது முதல் கணவன் எப்படி இறந்தார் என விசாரிக்க வேண்டும்


வாய்மையே வெல்லும்
ஆக 17, 2025 13:22

எனக்கு என்னவோ முதல்மாப்பிள்ளையும் இயற்கை எய்திய காரணங்கள் புலப்படவில்லை. அதுவும் செட்டிங் செய்து கொலையாக இருக்குமோ என உள்மனது சொல்லுது. அதுக்கும் சேர்த்து விசாரணை வையுங்க எசமான்


நிக்கோல்தாம்சன்
ஆக 17, 2025 13:09

எங்கேப்பா கவின் கொலைக்கு பொங்கிய போராளிகள் , ? விழித்து கொண்டு உங்களுடைய மொபைல் , லேப்டாப் சார்ஜ் செய்து கொண்டு முன்னர் வாருங்க


Ramesh Sargam
ஆக 17, 2025 13:05

இந்த வழக்கு ஒரு பத்து அல்லது இருபது வருடம் நொண்டும் . முடிவில் கார் ஏற்றி கொன்ற அந்த மாமனார் மீது போதிய சாட்சியங்கள் இல்லாமையால் அவரை இந்த நீதிமன்றம் விடுவிக்கிறது என்று ஒரு தீர்ப்பை நமது நீதிமன்றம் வழங்கும். அல்லது அந்த வழக்கு முடிவுக்கு வரும் முன்னரே, அந்த மாமனார் வயது முதிர்வால் இயற்கை மரணம் அடைந்திருப்பார்.


skrisnagmailcom
ஆக 17, 2025 12:51

தன்னுடைய கைம்பெண் மகளுக்கு ஒருவர் வாழ்வு குடுத்தால் கொலை செய்வதா. இதுவும் ஆணவ கொலையா என விசாரிக்கனும்


புதிய வீடியோ