உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரி குறைந்ததும் தங்கம் விலை மங்குது: மக்கள் மனசு பொங்குது

வரி குறைந்ததும் தங்கம் விலை மங்குது: மக்கள் மனசு பொங்குது

சென்னை: சுங்க வரி குறைக்கப்பட்டதால், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில், தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, தங்கம், வெள்ள விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இது எப்போது நடக்கும் என எதிர்பார்த்த மக்கள், அடுத்த சில மணி நேரங்களில் மகிழ்ச்சியான செய்தி வெளிவரத் துவங்கியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ok18ec4y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2,080 குறைந்து ரூ.52,400 ஆகவும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.260 ஆகவும், ரூ.6,550 ஆகவும் விற்பனை ஆனது.வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.3,100 குறைந்து ரூ.92,500 ஆக விற்பனை ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Dharmavaan
ஜூலை 23, 2024 20:29

இப்போது 9% வரி குறைவு ஆனால் பயனாளிகளுக்கு கிடைக்க வில்லை தங்கம் கிராமுக்கு 500 ரூபாய் குறைந்திருக்க வேண்டும்


Dharmavaan
ஜூலை 23, 2024 20:27

இது ஆவரண முடிவு இதனால் நடுத்தர மக்களுக்கு அதிக பலன் இல்லை. தங்கம்விலையை வியாபாரிகள் குறைப்பர்கலா அரசு இதை வாங்குவோருக்கு மாற்ற வேண்டும் என்று


கனோஜ் ஆங்ரே
ஜூலை 23, 2024 19:49

////அடுத்த சில மணி நேரங்களில் மகிழ்ச்சியான செய்தி வெளிவரத் துவங்கியது.//// புளுகுனாலும் பொருந்த புளுகணும்... இன்று காலை சுங்க வரி குறைக்கப்படும்..னு நிதியமைச்சர் அறிவிச்ச உடனே... தங்கம் விலை குறைஞ்சுடுச்சுன்னு சொல்றது ஓவராத் தெரியல.... எந்த கடையில, வரிய குறைச்ச உடனே வரி குறைப்பு செய்வாங்க...? நிதியமைச்சர் அறிவிச்சதற்கு பின்னால், அதனை நடைமுறைபடுத்த எத்தனை நாட்கள் ஆகும்... என்னய்யா, புளுகுறதுக்குக்கும் ஒரு எல்லை வேணாம்... “கேக்குறவ கேணயன்னா, கேப்பைல நெய் வடியும்பீங்களே”....


Venkatasubramanian krishnamurthy
ஜூலை 23, 2024 19:34

நகைக்கடைக்காரர்களின் இந்த விலைக்குறைப்பு என்பது குறுகிய கால கண்துடைப்பாகவே இருக்கும். பொதுவாக ஆடி மாதத்தில் விலை குறைவென்பது சகஜமே. ஆவணி மாதம் தொடங்கிவிட்டால் வியாபாரிகள் வரிக்குறைப்பின் பலனை நுகர்வோர்களுக்கு தருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.


Manalan
ஜூலை 23, 2024 19:08

கடத்தல் தங்கம் குறையும்


B.V. Prakash
ஜூலை 23, 2024 18:45

அரிசி GST குறைக்க நடவடிக்கை இல்லை. தங்க வரி குறைப்பு பணக்காரர்கள் மட்டுமே பலன் அடைய உதவும்.


Raja
ஜூலை 23, 2024 15:52

இறக்குமதி அதிகரிப்பால், ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடைவெளி அதிகரித்து ருபாய் மதிப்பு குறையும். டாலர் விலை ஏறும், பெட்ரோல் விலை அதிகமாகும். எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய நல்ல வாய்ப்பு15 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதம் குறைத்தால் சரி, பாதிக்கும் கீழ் 6 சதவிகிதம் குறைப்பு அறிவீனம்.


Muthurajeshwari
ஜூலை 23, 2024 15:47

தங்கம் விலை குறைவதால் எங்களுடைய பாமர மக்களுக்கு சந்தோசமாக இருக்கும். இன்னும் குறையவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்


Muthurajeshwari
ஜூலை 23, 2024 15:45

சூப்பர் Happy


Swaminathan L
ஜூலை 23, 2024 15:39

பட்ஜெட் வெளியானவுடன் தங்கம், வெள்ளி விலை குறைப்பு சரி. ஆனால், இது ஏற்கனவே இருப்பில், நகைக்கடைகளில் விற்பனைக்கு இருக்கும் மொத்த தங்க, வெள்ளி ஆபரணங்களுக்குப் பொருந்தும் என்கிற வகையில் ஒரு கேள்வி எழுகிறது. எவ்வளவு லாபம் இருந்தால் இது சாத்தியமானது?


மேலும் செய்திகள்







புதிய வீடியோ