உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜி.எஸ்.டி.,யை நீங்க கட்டிட்டு அரசிடமிருந்து வாங்கிக்குங்க! எம்.எல்.ஏ.,க்களுக்கு ஸ்டாலின் அனுமதி

ஜி.எஸ்.டி.,யை நீங்க கட்டிட்டு அரசிடமிருந்து வாங்கிக்குங்க! எம்.எல்.ஏ.,க்களுக்கு ஸ்டாலின் அனுமதி

சென்னை : எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஜி.எஸ்.டி., கட்டண சலுகையுடன், தலா, 3 கோடி ரூபாய் என, 702 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு, தொகுதி மேம் பாட்டு நிதியாக, ஆண்டுதோறும், 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதி நிதியில், 54 லட்சம் ரூபாயை, ஜி.எஸ்.டி.,யாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு, ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்க வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் சிலர், கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு விதிக்கப்படும், 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை தமிழக அரசே ஏற்கும் என்று அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில், தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக, எம்.எல்.ஏ.,வுக்கு தலா 3 கோடி ரூபாய் வீதம், நடப்பாண்டு 702 கோடி ரூபாயை ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கி உள்ளது. அதன்படி, எம்.எல்.ஏ.,க்கள் 3 கோடி ரூபாய்க்கு முழுமையாக, தொகுதி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியும். பணிகளை முடித்த பின், ஜி.எஸ்.டி., கட்டணம், 54 லட்சம் ரூபாயை, அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M S RAGHUNATHAN
அக் 14, 2025 07:21

நானும் அரசு தரும் சம்பளத்தில் தான் செலவு செய்கிறேன். அதற்கு GST காட்டுகிறேன். அதை இந்த மாநில அரசு எனக்கு திருப்பிக் கொடுக்கவேண்டும். மாநில அரசு தமிழகத்தில் state GST ஐ ரத்து செய்கிறோம் என்று ஒரு ஆணை பிறப்பித்தால் அது சரியாக இருக்கும். மக்கள் இனி CGST மட்டும் செலுத்தினால் போதும் என்று சொல்வார்களா?


M S RAGHUNATHAN
அக் 14, 2025 07:12

நிதி இல்லை என்று மூக்கால் அழும்.அரசு எப்படி 120 கோடி செலவை, வரியை ஏற்கிறது. Financial prudence இல்லாத ஒரு அரசு. அரசை வரி ஏற்குமெனில் தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப் பட்டதை CAG தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். 5 லக்ஷம் செலவாகக் கூடிய ஒரு திட்டத்திற்கு 15 லக்ஷம் செலவானதாக கணக்கு காண்பிக்கிறார்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள். இல்லை என்று அரசும் உறுப்பினர்களும் பிரமாண பத்திரமோ அல்லது வெள்ளை அறிக்கையோ தரட்டும்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ