உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணத்தை எண்ணியபடி பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்!

பணத்தை எண்ணியபடி பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பணத்தை எண்ணியபடியே பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.தொலைதூரங்களுக்குச் செல்லும் அரசு பஸ்களில், கண்டக்டர் இல்லாத பஸ்கள் இயங்கி வருகின்றன. இதுபோன்ற பஸ்களில் நகர எல்லையை தாண்டும் போது, கண்டக்டர் இறங்கிக் கொள்வார். அதன் பின்னர், வழியில் பயணிகளை டிரைவரே இறக்கி விடுவார், பயணிகள் ஏறினால் அவர்களுக்கு டிக்கெட்டும் கொடுப்பார். இந் நிலையில் கோவையில் இருந்து சேலம் வரை சென்ற அரசு பஸ்சில், அதன் ஓட்டுநர் கையில் பணத்தை எண்ணியபடியே வாகனத்தை இயக்கிய வீடியோ வெளியானது. பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்லக்கூடிய தருணத்தில் அதன் மீது கவனத்தை செலுத்தாமல் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.கடும் குற்றச்சாட்டுகள் எதிரொலியாக, அந்த குறிப்பிட்ட பஸ் டிரைவரை போக்குவரத்துக் கழக நிர்வாகம் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுகுறித்த விளக்கம் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது; இந்த சம்பவமானது,நேற்று (29.03.2025) இரவு நடந்தது. இந்த பஸ் கோயம்புத்தூரிலிருந்து சேலம் வரை செல்லும் கண்டக்டர் இல்லாத சேவையாகும். பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிய பிறகு கண்டக்டர், இறுதிப் பயணநடை என்பதால் டிரைவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு கணியூர் டோல்கேட்டில் இறங்கி விட்டார்.டிரைவர் பஸ்சை இயக்குவதற்கு முன்பு பணத்தை எண்ணியிருக்க வேண்டும். அதற்கு பதிலாக அவர் பஸ்சை இயக்கும் போது எண்ணினார். எனவே, இந்த குறிப்பிட்ட டிரைவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அனைத்து டிரைவர்களுக்கும் பாதுகாப்பாக பேருந்தை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramkumar Arumugam
மார் 31, 2025 16:44

நிறுத்தி எண்ணினால் எங்களுக்கு நேரம் ஆகிறது என ஒரு வீடியோ போடுவார்கள் நிறுத்தாமல் எண்ணினாலும் வீடியோ போடுவார்கள் இவனுங்க கையில் போன் இருக்கிறது என என்ன வேண்டுமானால் செய்யலாம்


நிக்கோல்தாம்சன்
மார் 30, 2025 20:26

இப்படி ஒரு சிஸ்டம் கொண்டுவந்த muட்டாள் தான் சஸ்பெண்ட் செய்யப்படவேண்டியவன் , அதனை விடுத்து அப்பாவி ட்ரைவரை ?


புதிய வீடியோ