உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பஸ் டிரைவரின் பணி நேர கட்டுப்பாடுகளை தளர்த்தணும்

 பஸ் டிரைவரின் பணி நேர கட்டுப்பாடுகளை தளர்த்தணும்

சென்னை: 'பஸ் டிரைவர்களின் பணி நேரக் கட்டுப்பாடுகளை, அரசு போக்குவரத்து நிறுவனங்கள் தளர்த்த வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே, அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபகாலமாக பஸ் விபத்துகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அரசு பஸ் டிரைவர்களுக்கு பணி நேரக் கட்டுப்பாடுகளை, அரசு போக்குவரத்து கழகங்கள் தளர்த்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான நிவாரணத்தை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். வாசன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், 'டிட்வா புயல் தாக்கத்தால், பல்வேறு மாவட்டங்களில், பரவலாக கன மழை பெய்து, விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்துள்ளன. 'விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனே ஆய்வு செய்து, ஏக்கருக்கு, 35,000 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
டிச 02, 2025 11:19

தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவர் பெரியவர் மூப்பனாரின் திருமகன் மதிப்பிற்குரிய வாசன் அவர்களின் கருத்திற்கு விளக்கம் தேவை.. ஜப்பானில் கொரியாவில் பஸ் திரிவார்கள் சுமார் 12மணி காலம் வேலை செய்கின்றனர். இந்தியாவில் பஞ்சாபி கர்நாடகாவில் 12 மணி நேரம்தான் வேலை. இந்தியர்களாகிய நமது உழைப்பை கம்யூனிஸ்ட்கள் வீணடித்துவிட்டனர். கம்யூனிஸ்ட்களை இந்தியாவை விட்டு துரத்தி ஆடிக்கவேண்டும். அரசு ஊழியர்கள் வேலை நேரம் 8 மணி தன ஆனால் அவர்கள் சுமார் 12 மணிநேரம் உழைக்கவேண்டியதுள்ளது . அதே போல் மற்றவர்களும் உழைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது நல்லதல்ல.ஒரு ரயில் டிரைவர் சுமார் 1214 மணி நேரம் உழைக்கிறார். அதேபோல் பலனே பிளாட்கள் 15 மணி நேரம் உழைக்கிறார்கள். எனவே உழைக்கும் இரத்திற் உரைக்க எவரும் பேசவேண்டாம் திருப்புத்தூர் அச்சிடேன்ட் ..ஒரு டிரிவரின் கவணக்குறைவு. அந்த ஆழியில் 80 கிலோமீட்டர் ஸ்பீட் என்பது அதிகம். எனவே பஸ் அவரது கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. பொதுவாக இந்திய ரோடுகள் 60 கிலோமீட்டர் ஸ்பீட் தான் செல்லமுடியும். பின்ன ஏன் ஓவெர்ஸ்பீட் . மேலும் அவுர்க்கு தைலக அரசில் இருந்து 0லட்சம் கேட்பது வோட்டை வங்கி ஆகா கேட்கிறீர்கள். விட்டு ஒழியுங்கள். ட்ரிவர்களுக்கு இன்சூரன்ஸ் உண்டு


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி