உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து அமைச்சருக்கு ஷாக் கொடுத்த பஸ் ஊழியர்கள்

போக்குவரத்து அமைச்சருக்கு ஷாக் கொடுத்த பஸ் ஊழியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர் : அனுமதி இல்லாத ஹோட்டலில் பஸ்சை நிறுத்தியது குறித்து கேள்வி எழுப்பிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம்,அவர் யாரென்றே தெரியாமல்பஸ் ஊழியர்கள்திருதிருவென விழித்துஅதிர்ச்சி அளித்தனர்.கோவை, கொடீசியா வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், 100 புதிய பஸ்களின் சேவையை கொடியசைத்து துவங்கி வைத்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காரில் அரியலுாருக்கு சென்றார்.கரூர் - -மாயனுார் இடையே ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தி டீ குடித்தார். அதே உணவகத்தில் ஒரு அரசு பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். இதை கவனித்த அமைச்சர் சிவசங்கர்,அவர்களிடம்பேச்சு கொடுத்தார்.'உங்களுக்குஉணவு, காபி, டீ சாப்பிடடெண்டர் விட்டு ஹோட்டல்களைஅரசு ஒதுக்கி உள்ளதே. அங்கு நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள்? இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு சென்றால் யார் பதில் சொல்வது?' என, கேட்டுள்ளார்.அமைச்சர் பேண்ட், சர்ட் அணிந்து பயணியை போல் இருந்ததால்,பஸ் ஊழியர்களுக்குஅடையாளம் தெரியவில்லை.திருதிருவென விழித்து நின்ற அவர்களிடம், 'நான் யார்னு தெரியுதா...' என, அமைச்சர் கேட்க,'தெரியலையே' எனபஸ் ஊழியர்கள் சொல்ல, 'நான் தான்பா மினிஸ்டர்' என்றார் சிவசங்கர்.பின்,'இனி இதுபோல் செய்யாமல், உங்களுக்கான இடத்தில் மட்டும் பஸ்சை நிறுத்தி உணவருந்துங்கள்' என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

vijai hindu
ஜூலை 07, 2025 12:18

இவங்க டெண்டர் விட்ட இடத்துல வெளியில யூரின் ஸ்மெல் தரமில்லாத உணவு டெண்டர் விட்டுட்டு அது திமுக ஆட்களாக இருக்கும் அவங்களுக்கு வருமானம் போய்விடும் அந்த அக்கறையில் அமைச்சர் சொல்லியிருப்பார்


GMM
ஜூலை 07, 2025 09:34

பயணிகள், டிரைவர்... உணவு, காபி, டீ சாப்பிட டெண்டர் விட்டு ஹோட்டல்களை தமிழகம் ஒதுக்கி உள்ளதே. அங்கு ஏன் மந்திரி நிறுத்தாமல் பிற தனியார் ஓட்டலில் டீ குடிக்க வேண்டும்? தமிழக பஸ் பராமரிப்பு மோசம்? டிக்கெட் எடுக்கவில்லை, முதியோர் சீட்டில் இளைஞர் அமர்வது, குறைந்த தூர பயணிகள் சீட் இடம் போட்டு வைப்பது, பெண் இருக்கையில் ஆண் அமர்வது, வரிசையாக ஏறாமல் முண்டியடித்து கொண்டு ஏறுவது போன்ற இடையூறுகள் ஏராளம். கண்டக்டர் எதுவும் கண்டு கொள்ள மாட்டார். பயண விதிகள் வகுத்து மீறினால், 500 ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத சிறை படுத்த முடியாதா? ஓட்டு பாதிக்கும்?


Velayutham rajeswaran
ஜூலை 07, 2025 09:00

பேருந்துகள் நிறுத்தும் பல சாலை ஓர உணவகங்கள் தரமில்லாத வை அதிக விலைக்கு பொருள்களை விற்பவர்கள் இப்போதாவது அமைச்சர் கவனத்துக்கு வந்தது நல்லது இனிமேலாவது பயணிகளுக்கு நல்ல உணவு சரியான விலையில் கிடைத்தால் மகிழ்ச்சி


RAAJ68
ஜூலை 07, 2025 07:42

இவரு ஏன் இந்த ஹோட்டலில் டீ குடிக்க வந்தார் அந்த ஹோட்டலுக்கு போகலாமே


Siva Balan
ஜூலை 07, 2025 07:36

காவல்துறையினர் போலிஸ் அமைச்சரை மதிப்பதில்லை. போக்குவரத்து துறையினர். துறை அமைச்சரை மதிப்பதில்லை. எதற்கு இந்த அரசு.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 07, 2025 06:53

கரூர் - -மாயனுார் இடையே ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தி டீ குடிச்சதுக்கு காசு கொடுத்தாரா?


Kundalakesi
ஜூலை 07, 2025 06:48

அவர்கள் கேட்க வேண்டும் - பயணிகளின் டிரைவர் கண்டக்டர் மட்டும் மொக்கை உணவு அருந்த வேண்டும். நீங்க நல்ல உணவு அருந்த வேண்டுமா


V K
ஜூலை 07, 2025 06:48

அமைச்சருக்கு கப்பம் கட்டாத ஹோட்டலில் போய் அரசு பஸ் நிறுத்தப்பட்டது உடனே அமைச்சருக்கு கோபம் கலக் ஷன் கமிஷன் இரவு பகள்னு பார்க்காம கொள்ளை அடிக்கும் அரசு


Venkateswaran
ஜூலை 07, 2025 06:42

இவர்கள் ஊழல் செய்து டெண்டர் விட்ட ஹோட்டலுக்கு நட்டம் ஏற்பட்டு விடுமாம்