உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் இணைப்புக்கு ரூ.13,000 லஞ்சம்: வணிக ஆய்வாளர் கைது

மின் இணைப்புக்கு ரூ.13,000 லஞ்சம்: வணிக ஆய்வாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செங்கல்பட்டு: தற்காலிக மின் இணைப்பு வழங்க, 13,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, ஊரப்பாக்கம் மின் வாரிய வணிக ஆய்வாளர் கைதானார்.செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த ஆதனுாரில் வசிப்பவர் ராஜசேகர். இவர், புதிதாக கட்டும் வீட்டிற்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு, ஊரப்பாக்கம் மின் வாரிய அலுவலகத்தில், கடந்த மார்ச்சில் விண்ணப்பித்தார்.நான்கு மாதங்கள் கடந்தும் மின் இணைப்பு கிடைக்காததால், மின் வாரிய வணிக ஆய்வாளர் ஏழுமலை, 56, என்பவரிடம், முறையிட்டுள்ளார். அவர், 'லஞ்சமாக 13,000 ரூபாய் கொடுத்தால், உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும்' என கூறியுள்ளார்.லஞ்சம் தர விரும்பாத ராஜசேகர், செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் இது குறித்து தெரிவித்தார். அவர்கள் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய 13,000 ரூபாயை எடுத்துச் சென்ற ராஜசேகர், ஏழுமலையிடம் நேற்று கொடுத்தார்.அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச பணம் வாங்கிய ஏழுமலையை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஏழுமலையை ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

minnalraja 0909
ஆக 14, 2025 23:30

அவர் ஒரு நல்ல மனிதர்


minnalraja 0909
ஆக 14, 2025 23:28

அவர் ஒரு நல்ல மனிதர் பலருக்கு தேவையான உதவிகளை செய்பவர் அலுவலகத்தில் சில வேலைகளை செய்வதற்கு அவர் அந்த பணத்தை வாங்குவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது


Palani EB
ஜூலை 27, 2025 21:08

சூப்பர் correctapanniurukanga


RAMESH
ஜூலை 26, 2025 13:36

டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபா லஞ்சம் கேட்கிறான்....அவனை யார் கைது செய்வது


D Natarajan
ஜூலை 26, 2025 10:21

லஞ்சம் கொடுக்காமல் மின் இணைப்பு வாங்க முடியாது. கையும் களவுமாக பிடி பட்ட இந்த அயோக்கியனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 26, 2025 10:58

அன்பரே, இவர் 13000 வாங்கி இருந்தாலும் மேலிடத்துக்கு பங்கு போக இவருக்கு 200 ருபாயும் ஒரு குவார்ட்டரும்தான் கிடைக்குமாம்.


Marimuthu Kaliyamoorthy
ஜூலை 26, 2025 22:21

HANG.


Padmasridharan
ஜூலை 26, 2025 09:43

"லஞ்சம் தர விரும்பாத " இவர்"... போலீசாரிடம் இது குறித்து தெரிவித்தார்" சாமியோவ், என்ன சொல்ல வர்றிங்க லஞ்சத்தை விரும்பி தரனும்னா. மொதல்ல இந்த சொற்களை மாற்றுங்கள். இந்த செய்திகளின் கீழ் புகார் எண்களை வெளியிடவும். தற்கொலை சம்மந்தப்பட்ட செய்திகளுக்கு கீழ் ஸ்னேஹா எண்களை கொடுப்பது மாதிரி


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 26, 2025 09:31

இவனை எல்லைப் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்துங்கள் .........


RAVINDRAN.G
ஜூலை 26, 2025 10:11

அங்கும் வேலையே இன்னொருத்தனுக்கு கொடுத்து பாதி சம்பள பணம் லஞ்சமா வாங்குவான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை