உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறிவாலயம் செல்வோருக்கு அறிவு குறைபாடு என கல்வெட்டு வைக்கலாமா?

அறிவாலயம் செல்வோருக்கு அறிவு குறைபாடு என கல்வெட்டு வைக்கலாமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை,: “அறிவாலயம் முன், அறிவாலயத்திற்கு செல்பவர்கள் அறிவு குறைபாடு உடையவர்கள் என்றும்; தி.க., அலுவலகம் முன், திடலுக்கு செல்வோர் மூளை குறைபாடு உடையவர்கள் என்றும் கல்வெட்டு வைத்தால், அதை அவர்கள் ஏற்று கொள்வரா,” என, தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் அவர் அளித்த பேட்டி:

திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக ஈ.வெ.ரா., சிலை உள்ளது. அதில், 'கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி, முட்டாள்' என வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டு உள்ளன.

நீதிமன்ற கருத்து

இதுதொடர்பாக, சினிமா 'ஸ்டன்ட்' இயக்குனர் கனல் கண்ணனின் வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, 'கோவிலுக்கு முன், கடவுளை வணங்க செல்வோர் இருக்கிற இடத்தில் இந்த வாசகங்கள் அவர்களின் மனதை புண்படுத்தும் வித்தில் இருக்கிறது' என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.இதன் அடிப்படையில் ஈ.வெ.ரா., சிலையை மாற்றி அமைக்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலையை வைத்து, கோவிலுக்கு வருவோரை திட்டும் வாசகம் இருக்கக்கூடாது.கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்து உடனடியாக ஈ.வெ.ரா., சிலை அகற்றப்பட வேண்டும்.வேண்டுமானால், தி.க.,வினர் சொந்தமாக நிலம் வாங்கி, அங்கே ஈ.வெ.ரா. சிலையை வைத்துக் கொள்ளட்டும். அதிலும்கூட, கடவுளுக்கு எதிரான வாசகங்கள் இருக்கக்கூடாது.அறிவாலயம் முன், 'அறிவாலயத்திற்கு செல்பவர்கள் அறிவு குறைபாடு உடையவர்கள்' என்றும்; தி.க.,வுக்கு சொந்தமான பெரியார் திடலுக்குச் செல்வோரை, 'மூளை குறைபாடு உடையவர்கள்' என்றும் கல்வெட்டு வைத்தால், அவர்கள் ஏற்று கொள்வரா.

யோசிக்க வேண்டும்

ஈ.வெ.ரா., சிலை குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரம் தற்போது வந்திருக்கிறது. இதை தமிழகம் யோசித்து பார்க்க வேண்டும்.தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர்; திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டு பேசியவர்; சுதந்திர தினம், தேசத்தின் கருப்பு தினம் என விமர்சித்தவர் ஈ.வெ.ரா.,மதுவிலக்குக்கு எதிராக தொடர்ந்து பேசியவர் ஈ.வெ.ரா., இவரைப் பற்றிய பாடம் தமிழக பள்ளி மாணவர்களுக்கு படிக்கக் கொடுக்கப்படுவதும், இவரைப் போற்றும் வகையிலான சிலைகள் ஊர் முழுக்க வைக்கப்படுவதுமான நிலை முற்றிலும் நீக்கப்பட வேண்டும். அதன் முதல் கட்டமாக, ஸ்ரீரங்கம் கோவில் முன் உள்ள ஈ.வெ.ரா., சிலை அங்கிருந்து விரைவில் அகற்றப்படும். அதற்காக, மிகப்பெரிய போராட்டத்துக்கு தயாராகி வருகிறோம். அதற்குள், அரசே முன் நின்று ஸ்ரீரங்கத்தில் உள்ள ஈ.வெ.ரா., சிலையை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

சாண்டில்யன்
அக் 19, 2024 11:22

நாம் சாமரம் போட சில காரணங்கள் தேவை அதற்கு சில நாட்டு நிலவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் • கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கேரளப் பகுதியில் குடியேறிய நம்பூதிரிகள் பூமியிலுள்ள கடவுள்கள் தாங்கள் என்று சொல்லி இப்போதும் இங்கே சிலர் இந்த மாதிரி சொல்கிறார்கள். அரசர்களும் பிறரும் மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்று வாழ்ந்தனர். மலையாள நாடு நம்பூதிரிப் பிராமணர்களான தங்களுக்குப் பரசுராமனால் ஈட்டித் தரப்பட்டது என்றும் இன்று மலையாளம் ஆண்டு தோறும் மாவலியைத்தான் கொண்டாடுகிறது அரசர் முதல் யாவரும் தங்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்டவர் என்றும் கூறி அதையே நடைமுறைப்படுத்தினர். • தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு, நாடார் கிருத்தவ பெண்களுக்கு மட்டும் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் “உரிமை” அளித்தது. • • யாரெல்லாம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்று கணக்கிடுகிறார்கள் • யாருக்கு கிரீமி லேயர் முத்திரை குத்தப் பட்டு சாதிவாரி கோட்டா கிடைக்காது என்கிறார்கள் • இந்த கோட்டாவில் நாம் பயனடைய போகிறோமா இல்லையா என்பதல்ல சிலர் தர்ம நியாயங்களை தெரிந்துதான் அவர்களை ஆதரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும் அல்லவா ஒரு காலத்தில் இது எனக்கு மன்னர் கொடுத்த சொத்து என்றார் ஒருவர் இப்போது அப்படி சொல்லி தப்பிக்க முடியாமல் ரெய்டில் சிக்கி தவிக்கும் நடிகைகள் பலர்


கத்தரிக்காய் வியாபாரி
அக் 17, 2024 13:38

அறிவாலயத்துக்கு முன்னாடி வச்சு உதாரணத்துக்கு கட்டுமரம்னு வைங்க


MADHAVAN
அக் 17, 2024 11:12

உன்னமாதிரி முட்டாளுக்குதாண் அறிவில்லை னு சொல்லி இருக்காரு


Yaro Oruvan
அக் 17, 2024 22:15

ஆத்தாடி.. எரநூறு ஓவாய்க்கு கூவீட்டான்.. படிக்காசு இல்லன்னா உபி பொழப்பு என்னாவுறது ?


gayathri
அக் 17, 2024 09:31

யாருக்கும் அறிவு இல்லை என்று சொல்ல என்ன உரிமை. முதலில் சொல்லுபவர்களுக்கு?


M Ramachandran
அக் 16, 2024 09:04

அண்ணாதுரை அண்ட் கம்பெனி கண்ணீர் நீர் விட்டு வெளியேருகிறோம் என்ற போது போங்க கண்ணீர் துளி பாசாங்களா என்று ஆசி வழங்கி கடுப்போடு அனுப்பி வைத்தார்.


Parthasarathy Badrinarayanan
அக் 16, 2024 08:51

ஊரறிந்த விஷயத்துக்கு கல்வெட்டு தேவையில்லை.


T.Gajendran
அக் 15, 2024 21:50

ஆமாங்கோ?? தந்தை பெரியார் சிலைகளை, தமிழ்நாட்டில் முற்றிலும், அகற்றிவிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகள், புல்புல் பறவையின் மீது, உட்கார்ந்து, பயணம் செய்த, கற்பனை, மூடர்கள்?, மானமும் அறிவும், இல்லாத, முட்டாள்களின்,? சிலைகளை, நிறுவலாமா?? தமிழ்நாட்டில், சொல்லுங்க ????


K.n. Dhasarathan
அக் 15, 2024 10:57

அதே போல கமலாலயம் செல்பவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கப்படும், அது எத்தகைய குற்ற செயலாக இருந்தாலும் வாஷிங் மெஷினில் போட்ட துணி போல அவர்கள் கறைகள் நீக்கப்பட்டு அவர்கள் மனிதரில் புனிதர் ஆகி விடுவார் என்று போஸ்டர் வைக்கலாமா ?


Parthasarathy Badrinarayanan
அக் 16, 2024 08:54

செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தவுடன் புனிதமாக திராவிடியாக்களுக்கு தெரியவில்லையா. காசுக்குப் பதிவிடும் தசரதன்


Sundaran
அக் 15, 2024 08:16

இது ஊர் அறிந்த உண்மை இதுக்கு கல்வெட்டு தேவை இல்லை . குறை பாடு இல்லை முழுவதும் அவுட்


adalarasan
அக் 14, 2024 22:16

ஒரு கேள்வி கேட்டாரு பாரு அருமை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை