மேலும் செய்திகள்
' டாஸ்மாக் ' கடைகளின் நேரத்தை குறைக்க திட்டம்!
29-May-2025
மதுரை:''திருப்பரங்குன்றத்தில் திருநீறு வைத்த பின் 6 மணி நேரம் நெற்றியில் இருந்தது. அதை யாரும் கவனிக்கவில்லை. நாள் முழுவதும் திருநீறு வைத்து கொண்டிருக்க முடியுமா,'' என, மதுரையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.மதுரையில் ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை தடை செய்ய வேண்டும் என மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் சட்ட கல்லுாரி சாலையில் மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் திருமாவளவன், திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் தலைமையில் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.பின் திருமாவளவன் கூறியதாவது: மனித சங்கிலி போராட்டம் முருக பக்தர்களுக்கு எதிரானது இல்லை.திருப்பரங்குன்றத்தில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையாக உள்ளனர். அங்கு பகைமை இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்.ஹிந்துக்களாக இருக்கும் ஒவ்வொருவரும் முருக பக்தர்கள் தான். பா.ஜ.,வை வளர்ப்பதற்காக மாநாடு நடத்துகின்றனர்.இந்தியா முழுவதும் மக்களிடம் செல்வாக்கு பெற்ற கடவுளை வைத்து மக்களை பிளவுபடுத்துகின்றனர்.வடக்கில் ராமன், மேற்கு வங்கத்தில் துர்கை, மகாராஷ்டிரத்தில் விநாயகர், கேரளத்தில் ஐயப்பன், தமிழகத்தில் முருகன் என கடவுளை கையில் எடுத்து பிளவுபடுத்துகின்றனர். ஹிந்துக்களை ஓரணியில் திரட்டுவது அவர்களை பாதுகாக்க அல்ல, ஓரணியில் சேர்த்து பா.ஜ., ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான். அதற்கு சில கட்சிகள் துணை போவது கவலை அளிக்கிறது. மாநாட்டின் நோக்கத்தை அரசியல் ரீதியாக தான் புரிந்து கொள்ள முடியும் என்றார்.நெற்றியில் இருந்த திருநீறை அழித்து விட்டு செல்பி எடுத்தது தொடர்பாக நிருபர்கள் கேட்டபோது, ''திருப்பரங்குன்றத்தில் திருநீறு வைத்த பின் 6 மணி நேரம் நெற்றியில் இருந்தது.அதை யாரும் கவனிக்கவில்லை. நாள் முழுவதும் திருநீறு வைத்து கொண்டிருக்க முடியுமா,'' என திருமாவளவன் எதிர்கேள்வி எழுப்பினார்.
29-May-2025