வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வேலை போன துக்கத்தில் மதுரை இளைஞர்கள் உள்ளார்கள். அவர்களிடம் வெற்றி என்று கூறுவது, வன்மம் நிறைந்தது.
ஊர்ல கல்யாணாம் மார்ல சந்தனம்
மேலும் செய்திகள்
இன்று அரிட்டாபட்டி செல்கிறார் முதல்வர்
26-Jan-2025
மதுரை: 'பொதுமக்கள் போராட்டம், தமிழக அரசின் சட்டசபை தீர்மானம் போன்றவற்றால் மேலுார் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இது நமக்கான வெற்றி' என மேலுாரில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மதுரை மாவட்டம் மேலுார் பகுதியில் அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான டெண்டரை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டங்கள் நடந்தன. தமிழக அரசும் சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.இதையடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு மேலுார் பகுதி பொதுமக்கள் பாராட்டு விழா நடத்தினர். இதில் பங்கேற்க நேற்று மதியம் முதல்வர் விமானத்தில் மதுரை வந்தார். அரிட்டாபட்டியில் முதல்வர் ஸ்டாலின் மக்களிடையே பேசியதாவது: இது நமக்கான வெற்றி
நான் இப்பகுதிக்கு திடீரென வந்த காரணம் உங்களுக்குத் தெரியும். அமைச்சர் மூர்த்தி தலைமையில் அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் சென்னையில் என்னை சந்தித்து டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்தது என அறிவித்துள்ளது என்றனர்.நமது எம்.பி.,க்கள், கூட்டணி கட்சி எம்.பி.,க்களும் பார்லிமென்டில் அழுத்தம் கொடுத்தனர். உங்களால் உருவாக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியில், தமிழக சட்டசபையில் அ.தி.மு.க., உட்பட அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு கிடைத்த வெற்றி இது என்றேன். மேலும் நான் முதல்வராக இருக்கும் வரை இந்த டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராது என உறுதியளித்தேன். ஒருவேளை அப்படி வந்தால் பதவியில் இருக்க மாட்டேன் என்றும் உறுதியா கூறினேன்.இந்நிலையில் திட்டம் ரத்தானதால் என்னை சந்தித்து பாராட்டு தெரிவிக்க வேண்டும் என அழைத்ததால் வந்துள்ளேன். இந்தப் பாராட்டு எனக்கானதல்ல. உங்களிடம் இருந்து என்னை நான் பிரித்து பார்க்கவில்லை. இது நமக்கானது. என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். இங்குள்ளோர் முகங்களை பார்க்கும்போது, நீண்ட நேரம் பேச வேண்டும் என்ற ஆசை உள்ளது.ஆனால் மேலும் இருநிகழ்ச்சிகளில் பங்கேற்று, விமானம் மூலம் சென்னை செல்ல வேண்டும். எனவே மீண்டும் உங்களை சந்திக்க வருவேன். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வர உள்ளது. உங்கள் ஆதரவு யாருக்கு என முடிவு செய்து விட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். இந்த ஆட்சி அண்ணாத்துரை, கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. அது உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். அ.தி.மு.க., எதிர்க்காததே காரணம்
ஏ.வள்ளாலபட்டியில் முதல்வர் பேசியதாவது:டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இதுவென பூரிப்போடு, பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என ஊர்ப்பெரியவர்கள் சென்னை வந்து என்னை அழைத்தனர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி கூறினர்.இந்த விழா உங்களுக்கு நடக்கிற பாராட்டு விழா. இத்திட்டம் கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், கனிம வளங்களை ஏலம் விடலாம் என மத்திய தொடர்ச்சி ௩ம் பக்கம்
வேலை போன துக்கத்தில் மதுரை இளைஞர்கள் உள்ளார்கள். அவர்களிடம் வெற்றி என்று கூறுவது, வன்மம் நிறைந்தது.
ஊர்ல கல்யாணாம் மார்ல சந்தனம்
26-Jan-2025