உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வயநாடு மக்களுக்கு என் இதயத்தில் தனி இடம்; சகோதரியை வெல்ல வைக்க ராகுல் ஐஸ்

வயநாடு மக்களுக்கு என் இதயத்தில் தனி இடம்; சகோதரியை வெல்ல வைக்க ராகுல் ஐஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வயநாடு மக்கள் என் இதயத்தில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்து விட்டனர் என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்., வேட்பாளர் பிரியங்கா நாளை (அக்.,23) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். வரும் நவ., 13ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து, சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வயநாடு தொகுதிக்கு பிரியங்காவை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிட நாளை பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்யும்போது, ​​எங்களுடன் வாருங்கள். வயநாடு மக்கள் தேவைக்காக பார்லிமென்டில் அவர்களது குரலாக பிரியங்கா ஒலிப்பார். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

பேசும் தமிழன்
அக் 23, 2024 08:13

கேரள மக்கள் படித்த அறிவிலிகள் இல்லை என்று இந்த முறையாவது நிரூபிக்க வேண்டும்.. இவர்கள் நாட்டு மக்களால் வடக்கே இருந்து விரட்டப்பட்டதால் இங்கே வந்து இருக்கிறார்கள்.... இவர்களை அப்படியே இத்தாலிக்கு விரட்டி அடியுங்கள்.....அது தான் நாட்டுக்கு நீங்கள் செய்யும் நன்மை.


Balasubramanian
அக் 23, 2024 06:12

அக்கா வெற்றி பெற்றால் காங்கிரஸ் ஏற்கனவே வாக்களித்தபடி வய நாட்டில் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டித் தருமா?


கிஜன்
அக் 22, 2024 23:48

கன்னடவன்லாம் ஜெயிக்கும் போது .... இந்த நாட்டிற்காக உயிரை கொடுத்தவரின் மகள் வெல்லக்கூடாதா ? பிரியங்கா காந்தி அவர்கள் அபார வெற்றி பெறுவார் .... கன்னியாகுமரியில் நின்றிருக்க வேண்டும் ... மிஸ் ஆகி விட்டது ...


Beskiantony Dass
அக் 22, 2024 23:32

ஏன்...


Beskiantony Dass
அக் 22, 2024 23:29

ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் நின்று ஜெயித்துவிட்டு, பிறகு அதில் ஒரு தொகுதியை விரும்பியபடி ராஜினாமா செய்துவிட்டு, மறுபடியும் அதே தொகுதியில் வேறு ஒருவரை வேட்பாளராக நிற்கவைத்து, மக்களை மறுபடியும் ஓட்டுப்போட வைத்து ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும், ஏன் அரசுக்கு இரண்டு முறை தேர்தல் செலவு?யாருடைய பணம் செலவு செய்ய? ஏன் இந்தமுறை பின்பற்றப்படுகிறது?


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 22, 2024 21:12

மரீனா கடற்கரையில் ஒரு இதயம் லப்டாப் லப்டாப் லப்டாப் என அடிக்குதாம் .. எட்டிப்பார்த்தால் கட்டுமரம் ... அவரோட ஆழ்மனது குரல்.. " நாமதான் தமிழகமக்களுக்கு குல்லாபோட்டு .. என்னுடைய இதயத்தில் உங்களுக்கு இடம் உண்டு " என சொல்லி ஜெயிப்பேன்.. இப்போ என்னோடபாணியில் வடக்கத்திய ராவுளு ஈயடிச்சான் காபி செஞ்சு வயநாட்டில் கலர் கலராக ரீலு விடறாரே,, இந்த படா ரீலை கண்டிப்பா மக்கள் நம்பநாட்டார்கள் பாப்போம்..


பேசும் தமிழன்
அக் 22, 2024 19:51

அப்போ என்னத்துக்கு ராஜா.... வயநாடு MP பதவியை ராஜினாமா செய்தாய் ???.... எப்போதும் மக்களை ஏமாற்ற முடியாது.... அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விழித்து கொண்டு வருகிறார்கள்... நீங்கள் யார்.... உங்கள் உண்மையான பெயர் என்ன..... மக்களை ஏமாற்ற... போலியாக காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள் என்று மக்களுக்கு தெரியும்.


M Ramachandran
அக் 22, 2024 19:45

அதனால் தான் அவர்கள் இன்னலில் இருந்த போது அமெரிக்காவிற்கு பயணம் மேற் கொண்டார் ராவுளு


kuruvi
அக் 22, 2024 19:21

மக்கள் பிரதிநிதி சட்டப்படி தேர்தலில் போட்டியிடுபவர் அந்த தொகுதியில் சாதாரணமாக குடியிருப்பவராக இருக்கவேண்டும்.ஒரு தொகுதிக்கும் அதிகமாக வாக்களிக்க பதிவு செய்திருக்க கூடாது. இதை மீறி அவருடைய மனுவை அங்கீகரித்தால் அது சட்டத்தை மீறியதாகும்.


Ramesh Sargam
அக் 22, 2024 19:15

இதயத்தில் தனி இடம்... அந்த இடத்தில் வீடு இழந்தவர்களை தங்கவைக்க முடியாது ராகுல். காங்கிரஸ் கட்சியின் பணத்திலிருந்து அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து உங்கள் இதயத்தில் அவர்கள் அன்பை இடம் பிடிக்கவும். சினிமா வசனம் தேவையில்லை.


முக்கிய வீடியோ