உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார் பார்க்கிங் பிரச்னை; பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது!

கார் பார்க்கிங் பிரச்னை; பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சென்னையில் கார் பார்க்கிங் பிரச்னையால் நீதிபதி மகனுடன் கைகலப்பில் ஈடுபட்ட பிக் பாஸ் பிரபலம் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன், கூகுள் குட்டப்பா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். சென்னை முகப்பேர் அருகே தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே டீக்கடை ஒன்று இருந்துள்ளது, இந்தக் கடையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி, நேற்று இரவு, தன் தோழியுடன் டீ குடிப்பதற்காக, காரில் சென்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rpcgzlzp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தர்ஷனின் வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். அப்போது, காரை எடுக்குமாறு தர்ஷன் கூறியுள்ளார். இதனால், அவருக்கும், ஐகோர்ட் நீதிபதியின் மகனுக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதில், நீதிபதியின் மகன் மற்றும் அந்தப் பெண் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக ஜெ.ஜெ., நகர் போலீஸ் ஸ்டேஷனில் நீதிபதி மகன் புகார் அளித்தார். நடிகர் தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இரு தரப்பு புகாரையும் ஏற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிபதியின் மகன், அவரது தோழியை தாக்கியதாக பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mecca Shivan
ஏப் 05, 2025 20:27

அப்போ அந்த நீதிபதியின் மகன் இன்னொருத்தர் வீட்டின் முன் வண்டி நிறுத்தியது தவறு இல்லையா .. அந்த இன்னொருவரை கோபப்படுத்தியது தவறு இல்லையா ... ORU புறம் போலீசுக்கும் அழுத்தம் .. திமுக மறுபுறம்...


சூரியா
ஏப் 05, 2025 06:57

இலங்கைக் குடிமகனாக தர்ஷன் நம் நாட்டிலேயே எத்தனை ஆண்டுகள் டேரா போட்டிருப்பான்? அயல் நாட்டவர் ஏதேனும் சட்ட விரோதச் செயலில் ஈடுபட்டால் அவர்களின் விசாவை இரத்து செய்து நாட்டைவிட்டு வெளியேற்ற சட்டத்தில் வாய்ப்பு இருக்கிறது.


நிக்கோல்தாம்சன்
ஏப் 04, 2025 18:26

அப்போ தவறா கார் நிறுத்திய நீதிபதி மகனுக்கு என்ன தண்டனை ? தந்தை நீதிபதி என்பதால் அதிகார போதையில் இருந்துள்ளான் அவரது மகன் , அப்போ அந்த நீதிபதி பதவி போயிட்டா ?


நிக்கோல்தாம்சன்
ஏப் 04, 2025 19:47

இப்போதான் புரியுது ,திராவிடிய கட்சி சார்ந்த அந்த குமார் நீதியரசரின் மகனா இந்த சமூக அக்கறை இல்லாமல் காரை நிறுத்திய பகுத்தறிவு வியாதி ?


அப்பாவி
ஏப் 04, 2025 17:48

கார் நிறுத்த இடமில்லாதவங்களுக் கெல்லாம் கார் வித்து பொருளாதாரம் ஓஹோன்னு போய் நாம வல்லரசாயிடுவோம். இன்னும் சீனாக்காரன் வேற வந்து எலட்ரிக் கார் தயாரிக்கப் போறானாம்.


Balu
ஏப் 04, 2025 13:52

பணம் அல்லது அதிகாரம் உள்ளவர்களிடம் சட்டம் மற்றும் நீதி கை கட்டி நிற்கும்.


Padmasridharan
ஏப் 04, 2025 13:42

கார், மற்ற வண்டிகளும் எங்கு விடவேண்டுமென்று ஒரு basic sense இல்லாமல் தான் நகரவாசிகள் இருக்கின்றனர். நடக்கும் பாதையையும் அடைத்துகொண்டு நடப்பவர்களுக்கும், மிதி வண்டியில் செல்பவர்களுக்கும் உரிமை இல்லாமல் இருக்கின்றது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை