உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்து; ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்து; ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில், மணலூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த கார், டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5349nkkb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூலை 20, 2025 19:34

தயவு செய்து சீட் பெல்ட்டை அணியுங்கள். இந்த நான்கு பேரும் சீட் பெல்ட்டை அணிந்திருப்பார்களேயானால் அவர்கள் கண்டிப்பாக இன்று உயிரோடு இருந்திருப்பார்கள். இங்கே ஓமானில் சீட் பெல்ட் அணியவில்லையென்றால் 10000 தண்டம்.


சமீபத்திய செய்தி