வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வழக்கமாக குடுக்கும் அரிசியே. இந்த மாதம் குறைவாக தான் கொடுக்கபட்டது
சென்னை: ரேஷன் கடைகளில், நவம்பர் மாத அரிசியை, இம்மாதமே வாங்க அரசு அழைப்பு விடுத்தும், அதை வாங்க கார்டுதாரர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதுவரை, 5 லட்சம் கார்டுதாரர்களுக்கு, 8,000 டன் அரிசி மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், 2.25 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதந்தோறும் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை காலம் துவங்கி உள்ளது. இதனால், அடுத்த மாதத்திற்குரிய அரிசியை, கார்டுதாரர்கள் இம்மாதமே வாங்கிக் கொள்ளலாம் என, தமிழக அரசு கடந்த 15ம் தேதி அறிவித்தது. ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, கூடுதல் அரிசி வழங்கும் பணி, 18ம் தேதி முதல் துவங்கியது, தொடர்ந்து, 20ம் தேதி தீபாவளியை கொண்டாட, பலரும் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு சென்றனர். கடந்த ஒரு வாரமாக மழை பெய்வதால், பலர் வீடுகளை விட்டு வெளியே செல்லவில்லை. இதனால், நவம்பர் மாத அரிசியை, இம்மாதமே வாங்க அழைப்பு விடுத்தும், கார்டுதாரர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், இதுவரை, 5 லட்சம் கார்டுதாரர்களுக்கு, 8,000 டன் அரிசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கார்டுதாரர்கள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையால், இம்மாத துவக்கத்திலேயே, இம்மாதத்திற்கான பொருட்களை பலர் வாங்கினர். இரு வாரங்கள் கழித்து, அடுத்த மாத அரிசியை இம்மாதம் வாங்கி கொள்ளலாம் என்று அரசு தெரிவித்தது. அடுத்த மாத அரிசியை தற்போது வாங்கினாலும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் வாங்க, அடுத்த மாதம் மீண்டும் கடைக்கு செல்ல வேண்டும். அதற்கு அடுத்த மாதமே வந்து, ஒரே சமயத்தில் அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். அடுத்த மாதத்திற்கான அனைத்து பொருட்களையும் வழங்கி இருந்தால், பலரும் வாங்கியிருப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வழக்கமாக குடுக்கும் அரிசியே. இந்த மாதம் குறைவாக தான் கொடுக்கபட்டது