உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்சல் புக்கிங் முறைகேடு தபால் ஊழியர்கள் மீது வழக்கு

பார்சல் புக்கிங் முறைகேடு தபால் ஊழியர்கள் மீது வழக்கு

சேலம், :சேலம் ரயில்வே ஸ்டேஷனில், தபால் பார்சல் சர்வீஸ் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் நடந்த தணிக்கையில், 2017 அக்டோபர் முதல், 2018 மே வரை, முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக கட்டணத்தை குறைத்து, 'புக்கிங்' செய்ததில் தபால் பிரிவுக்கு, 7.51 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. சேலம் ஆர்.எம்.எஸ்., உதவி தபால் கண்காணிப்பாளர் பாலாஜி புகாரின்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்தனர். இதன் அடிப்படையில் தபால் பிரிவு ஊழியர்கள் அனிதாகுமாரி, சக்தி, சண்முகப்பிரியா, ராஜகோபால், சுதர்சன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ