உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து பெண்களை அவமதித்ததாக திருமா மீது தொடர்ந்த வழக்கு ரத்து

ஹிந்து பெண்களை அவமதித்ததாக திருமா மீது தொடர்ந்த வழக்கு ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஹிந்து பெண்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பதிவான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, 2020 செப்டம்பர், 27ல் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இதில், பங்கேற்ற திருமாவளவன், ஹிந்து பெண்களுக்கு அவமதிப்பு, வெறுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி, மதுரையை சேர்ந்த வேதா என்ற தாமோதரன், பேரையூர் நீதிமன்றத்தில், தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்தார்.இப்புகாரின் அடிப்படையில், பேரையூர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:'மனு ஸ்மிருதி' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட உள்ளடக்கங்களை தான், மனுதாரர் பேசியுள்ளார் என்பதை, அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண மனுவை பார்க்கும் போது அனுமானிக்க முடிகிறது. புத்தகத்தில் உள்ளதை தான் பொதுவாக பேசியுள்ளார். புகார்தாரர் தரப்பில் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.வெறுப்புணர்வை ஏற்படுத்த எந்த நோக்கமும் இல்லை; யாரையும் பாதிக்கவில்லை; அவரது பேச்சில் இடம்பெற்ற வார்த்தைகள் பொதுவானது என்பதால், மனுதாரருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sankar
ஜன 03, 2025 14:55

சுப்ரீம்கோர்ட்டிற்கு செல்லுங்கள்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 03, 2025 14:02

இதை இதைதான் தமிழகமே எதிர்பார்த்த தீர்ப்பு. வழக்கு தொடுத்தவர் விலை போயிருக்கலாம். அல்லது வழக்கு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டிருக்கலாம். அல்லது வக்கீல்கள் நண்பர்கள் ஆகி இருக்கலாம். இது போன்று பல அல்லது இருக்கலாம். சரி விடுங்க இந்த மாதிரி தானே இந்துக்களுக்கு எதிராக எல்லா தீர்ப்பும் வரும்னு எங்களுக்கு தெரியும்.


V.Rajmojan
ஜன 03, 2025 08:19

படித்தவன் பாதகம் செய்தால் அய்யோன்னு போவான். ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த சொரணையில்லா இந்துக்கள் சந்தோசப்படட்டும்.


Mani . V
ஜன 03, 2025 06:18

எதற்கும் ஒரு விலை உண்டு. திமுக வும், அதன் கூட்டணிக் கட்சியும் அதைக் கொடுத்து வாங்கி விடும்.


N.Purushothaman
ஜன 03, 2025 04:58

மனு ஸ்முருதி வழக்கத்தில் இல்லாத ஒன்று ...அதை எடுத்து பேச இந்தியா காரணாம் என்ன ? அப்போ அது உள்நோக்கம் இல்லையா ...நீதியரசர் இந்த கோணத்தில் பார்க்காததன் காரணம் என்னவோ ? நீதிமன்றம் ஸ்மூருதியை அங்கீகரிப்பது போல உள்ளது தீர்ப்பு ....மேல் முறையீடு செய்யலாம் ...ஆனால் உச்ச நீதிமன்ற செல்லும் செலவு போன்றவை மனசோர்வை ஏற்படுத்தி விடும் ...


Naga Subramanian
ஜன 03, 2025 04:49

சிறந்ததொரு மனிதர். சிறுபான்மையராக அனைவரும் மாறிவிட்டால், இவரால் எந்த தீங்கும் கிடையாது . மொத்தத்தில் இவர் தரிசாக கிடக்கும் நிலத்திற்கு ஒப்பானவர்.


R.Subramanian
ஜன 03, 2025 04:45

மனுஸ்ம்ரிதி கலியுகத்தின் நூல் அல்ல, கலியுகத்தில் பயன்படுத்த வேண்டிய நூல் பராசர ஸ்மிரிதி ஆனால் வில்லியம் ஜோன்ஸ் போன்ற ஆங்கிலேயர்கள் மனுஸ்ம்ரிதியை ஹிந்துக்களின் சட்டமாக கொண்டு வர முயற்சித்தார்கள் அதையே மதாற்றத்தில் ஈடுபடுபவர்களும் பயன்படுத்தினார்கள் அதை நம்பி திருமா அம்பேத்கார் போன்றவர்களும் வெறுப்பை தூண்டி விட்டார்கள்..


இவன்
ஜன 03, 2025 04:34

ஓசி சோறு நீதிபதி ங்க


Srameshsrivi
ஜன 03, 2025 03:24

இதே தொல். திருமா, வேறு மதங்களில் இருக்கும் குறைபாடுகளை மேற்கோள் காட்டிப் பற்றிப்பேசட்டும், தைரியம் இருந்தால்.....


N Sasikumar Yadhav
ஜன 03, 2025 03:12

இந்துமத துரோகிகளான திராவிட மாடல் களவானிங்க ஆட்சியில் இந்த வழக்கு ரத்துச்செய்ய படாமல் இருந்தால் ஆச்சர்யம் . இந்துமத துரோக கும்பலுக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த இந்துக்கள் வாழ்க வாழ்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை