உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் நிறுவனம் மீது வழக்கு பதிவு

ஆன்லைன் நிறுவனம் மீது வழக்கு பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையை தலைமையிடமாக கொண்ட, 'மைவி3 ஆட்ஸ்' என்ற நிறுவனம், ஆன்லைனில் விளம்பரங்கள் பார்த்து 'லைக்' போடுவது மற்றும் பொருட்களை வாங்குவதன் வாயிலாக வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளது.தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இவர்களுக்கு தினமும், 100 - 600 ரூபாய் வரை, அவர்கள் பார்க்கும் விளம்பரத்திற்கு ஏற்ப பணம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், இந்நிறுவனம் மோசடியான முறையில் மக்களிடம் பணம் வசூலித்து வருவதாக, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில், மாநகர சைபர் கிரைம் எஸ்.ஐ., புகார் அளித்துள்ளார்.

கூடுதல் தொகை

புகாரில் கூறியிருப்பதாவது:'யூடியூபில் மைவி3 ஆட்ஸ் எம்.டி.,போர்ம்' என்ற சேனலில், மைவி3 ஆட்ஸ் என்ற விளம்பர வீடியோவில், தினசரி மொபைல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 முதல் 1,800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என, கூறப்பட்டிருந்தது.அடிப்படை உறுப்பினராக சேர 360 ரூபாய், அடுத்தடுத்த சில்வர், கோல்டு, டைமண்டு என பிரித்து, அதில் உறுப்பினராக முறையே 3060 ரூபாய், 30,360 ரூபாய், 60,660 ரூபாய், கிரவுன் மெம்பர் ஆக 1 லட்சத்து 21,260 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், கூறப்பட்டிருந்தது.செலுத்தும் தொகைகளுக்கு, ஆயுர்வேத கேப்ஸ்யூல்கள் வழங்கப்படும் எனவும், சேர்ந்த நபர்கள் அவர்களுக்கு கீழ், புது நபர்களை அறிமுகப்படுத்தினால், புரமோஷன் மற்றும் புதிதாக சேரும் நபர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப, கூடுதல் தொகை மற்றும் சிறப்பு ரிவார்டு வழங்கப்படும் எனவும், விளம்பரத்தில் கூறப்பட்டு இருந்தது.உறுப்பினராக சேர்ந்த உடன், தினமும் விளம்பரம் பார்த்தால் அதீத வருமானம் ஈட்டலாம் என்று, பொதுமக்களுக்கு பேராசையை துாண்டும் வண்ணம் விளம்பரம் இருந்தது.தொகை செலுத்தி சேரும் நபர்கள், நிறுவனத்தின் விளம்பரம் பார்த்தால் பணம் கொடுப்பதாக கூறுவதில், எந்தவித சாத்தியக்கூறும் இருப்பதாக தெரியவில்லை. இத்திட்டத்தில் சேருபவர்களுக்கு, எந்த அடிப்படையில் வருமானம் கொடுப்பர் என்ற எந்த ஒரு விபரமும் அவர்கள் இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்கவில்லை.மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து கொடுப்பது சட்டத்திற்கு புறம்பானது. மக்களுக்கு ஆசை காட்டி, மருத்துவ துறையால் பரிந்துரைக்கபடாத மற்றும் உறுதிப்படுத்தப்படாத பொருட்களை, பொதுமக்களுக்கு கொடுப்பதாக விளம்பரப்படுத்தி உள்ளனர்.பொதுமக்களை ஏமாற்றி, பெரும் தொகையை வசூலித்துக் கொண்டிருக்கும் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துஇருந்தார்.மாநகர குற்றப்பிரிவு போலீசார் அந்த ஆன்லைன் நிறுவனம் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

பாரதி
ஜன 30, 2024 13:42

நடக்கிறது திமுக-வின் ஆட்சி. கேஸ் போடுறவங்க ஜாக்கிரதையா இருந்துக்கோங்க...


ஆரூர் ரங்
ஜன 30, 2024 12:22

நானும் ஒரு MLM துவங்கலாம் என யோசனை வருது. சிம்பிள் வேலை. தினமும் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு போகும் வரும் கொசுக்களை எண்ணினால் போதும்.???? முதல் பிராஞ்ச் ஈமு பண்ணை ஊரு.


loganathan
ஜன 30, 2024 10:07

வணக்கம், நாட்டிலும், ஊரிலும் சோம்பேறிகள் அதிகமாயி விட்டார்கள். ஏமாறும் மக்கள் இருக்கும் வரை, இதுமாதிரி கும்பல் வந்து கொண்டே இருக்கும்.


Kumar
ஜன 30, 2024 09:34

நிறுவனம் பின்னாடி ...


Kalyanaraman
ஜன 30, 2024 09:02

இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வரவே 2-3 வருடங்களாவது ஆகும். பிறகு, நீதிமன்றங்கள் தனது பங்கிற்கு ஆமைக்கே சவால் விடும் வேகத்தில் முடிவு தெரியாமல் 25-30 வருடங்களுக்காவது இழுத்துச் செல்லும். கடைசியில் வழக்கு போட்டவர்களே இறந்து போய்விடுவார்கள். பிறகென்ன??? நமது கையாலாகாத, குற்வாளிகளை பெருக்கும் சட்டங்களும் நீதிமன்றங்களும் இருக்கும் வரை இப்படிப்பட்ட அவலங்கள் தொடரத்தான் செய்யும்.


VENKATASUBRAMANIAN
ஜன 30, 2024 08:39

மக்கள் திருந்தவே மாட்டார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுவார்கள்


கண்ணன்,மேலூர்
ஜன 30, 2024 06:48

நாளைக்கு இந்த முட்டாள்களே எங்களை அந்த நிறுவனம் ஏமாற்றி விட்டது என்று கூறி ரோட்டை மறித்து ஆர்ப்பாட்டம் பண்ணும் நிலைக்கு வருவார்கள்.


Ramesh Sargam
ஜன 30, 2024 06:39

மக்களிடையே உள்ள துராசையை (அதிக ஆசை), பயன்படுத்தி இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவது காலம் காலமாக நடக்கும் ஒன்று. முதலில் மக்கள் திருந்தவேண்டும்.


தமிழ் மைந்தன்
ஜன 30, 2024 06:38

தமிழக மக்களை பேராசை காட்டி ஏமாற்றிய இன்றும் ஏமாற்றும் ஊழல் திமுக மீது என்ன நடவடிக்கை எடுக்க உத்தேசம் உள்ளது.


Kasimani Baskaran
ஜன 30, 2024 05:23

கூகுளே விளம்பரத்தில்த்தான் ஓடுகிறது. விளம்பரம் இல்லை என்றால் நோ கூகுள். இவர்கள் நுகர்வோரை நேரடியாக வேலைக்கு அமர்த்தி போலியாக கிளிக் செய்து (பார்க்க வைத்து) கூகிளின் வருமானத்தை அதிகரித்து விளம்பரம் கொடுத்தவனை தலையில் துண்டு போடச்செய்கிறார்கள். எப்படியோ கூகிளின் இரத்தத்தை சிறிது உரிஞ்சி விடுவது போல தெரிகிறது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை