உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவதுாறு கருத்துக்கு தடை கோரி வழக்கு

அவதுாறு கருத்துக்கு தடை கோரி வழக்கு

சென்னை; மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் குறித்து, அவதுாறு கருத்து தெரிவிக்க, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னை ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக, சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும், 'டேக்' செய்திருந்தார். இந்த விவகாரத்தில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேச, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி, மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், மனு குறித்து ஜாய் கிரிசில்டா பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை