உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாட்சிகளின் வாக்குமூலத்தில் ஜாதி, மதம் தவிர்க்க வழக்கு

சாட்சிகளின் வாக்குமூலத்தில் ஜாதி, மதம் தவிர்க்க வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : கீழமை நீதிமன்றங்களில் சாட்சிகளின் வாக்கு மூலத்தில் ஜாதி, மதம் பதிவிடுவதை தவிர்க்க தாக்கலான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் கோகுல் அபிமன்யூ தாக்கல் செய்த பொதுநல மனு:

குற்ற வழக்குகளில், கீழமை நீதிமன்றங்களில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெறுகிறது. அவர்களின் வாக்குமூலத்தில் ஜாதி, மதம் பதிவு செய்யப்படுகிறது. முகவரியை பதிவு செய்யலாம். ஜாதி, மதத்தை குறிப்பிடுவதை அறிந்து நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் அல்லது நீதிமன்ற அலுவலர்கள் யாரேனும் பாரபட்சமாக செயல்பட வாய்ப்பு உள்ளது.சாட்சிகளின் ஜாதி, மதம் விபரங்கள், வழக்கில் எந்த பங்கும் வகிப்பதில்லை. அதை அறிந்து கொள்ளாமலேயே கீழமை நீதிமன்றங்கள் வழக்கை முடிக்க இயலும். உயர் நீதிமன்றங்கள் அல்லது கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுதாரர்களின் வழக்கு ஆவணம், மெமோவில் சம்பந்தப்பட்ட நபர்களின் ஜாதி, மதம் இடம் பெறக்கூடாது. இதை அனைத்து உயர்நீதிமன்றங்களும் உறுதி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கீழமை நீதிமன்றங்கள் சாட்சிகளின் ஜாதி, மதம் விபரங்களை கோரும் நடைமுறையை கைவிடவில்லை. பாரபட்சமற்ற முறையில், நீதி வழங்குவதே நீதித்துறையின் நோக்கம். சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு மனு அனுப்பினேன். சாட்சிகளின் வாக்குமூலத்தில் ஜாதி, மதம் பதிவிட விபரம் கோருவதை தவிர்க்க கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தரப்பு வழக்கறிஞர், 'மெமொ, சிவில் வழக்கு ஆவணங்களில் ஜாதி, மதம் குறிப்பிடுவதை தவிர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாட்சி களின் வாக்குமூலத்தில் அவற்றை தவிர்ப்பது பற்றி உத்தரவில் தெளிவுபடுத்தவில்லை. 'இது தொடர்பான விவகாரம், சென்னை உயர் நீதிமன்ற குற்றவியல் விதிமுறைகள் குழுவில் நிலுவையில் உள்ளது. அது முடிவெடுக்க வேண்டியுள்ளது' என்று, தெரிவித்தார்.உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தரப்பில் நவம்பர், 21ல் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ்வேள்
நவ 05, 2024 20:01

சாதி சண்டை தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் சாதி எழுத்து மூலம் ஆதாரத்துடன் வெளிப்படையாக கோர்ட்டுக்கு தெரிவிக்க பட வேண்டிய அவசியம் உள்ளது..அது இன்றி எப்படி வழக்கு நடக்கும்? பிறப்பு முதல் இறப்பு வரை சாதி பிரிக்க முடியாத ஒன்று... அப்படி எவனாவது தனக்கு சாதி இல்லை என்று சொன்னால் அவனது பின்னணியில் ஏதோ மிகப்பெரிய கோளாறு பிரச்சினை இருக்கிறது என்று பொருள்


ஆரூர் ரங்
நவ 05, 2024 14:50

சமீபகாலம் வரை கூட கிரயப்பத்திரம் உயில் ஆகியவற்றில் மதம் சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதுவது வழக்கமாக இருந்தது. அவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாதியை விட்டுவிட்டு தொடர முடியாது. அதே போல வழக்காடிகளும், சாட்சிகளும் அடையாள அட்டைகளில் ( சாதியுடன்) உள்ளபடியே தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என விரும்பினால் கோர்ட் எதுவும் செய்வதற்கில்லை.


Venkatesan Srinivasan
நவ 05, 2024 11:11

இந்த கட்டுரையில் மனுதாரர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு சம்பந்தமான மெமோ குறிப்புகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் ஜாதி மத தகவல்கள் தவிர்க்க குறிப்பிட்டுள்ளதாக பொத்தாம் பொதுவாக கூறியுள்ளார். ஆனால் பின்வரும் பத்தியில் சிவில்/கிரிமினல் வழக்குகளில் நடைமுறை பற்றி சில சரியான தகவல்கள் உள்ளன. மேலும் எல்லா அரசு நடைமுறைகளிலும் தனிநபர் அடையாளமாக ஜாதி மத குடும்ப பிண்ணணி தகவல்கள் கொண்ட ஆதார் வலியுறுத்தப்படுகிறது. பொதுவாக உலகின் எல்லா நாடுகளிலும் மத இன பிரிவுகள் குறிப்புகள் கொண்ட தனிநபர் அடையாளம் உபயோகத்தில் உள்ளது. நம் நாட்டிலும் பரவலாக பெருவாரியான மக்களால் மத ஜாதி பிரிவுகள் உள்ளடக்கிய பெயர்கள் வழக்கத்தில் உள்ளது. எனவே குற்ற வழக்குகளில் மட்டும் ஏதோ தனிநபர் இரகசிய தகவல் வெளியாவதாக கருதுவது தவறான கருத்து.


KRISHNAN R
நவ 05, 2024 07:01

யாரும் கேட்பதில்லை..சாட்சியம் முன்பு...அவரவர்.. மத புத்தகம் வைத்து பிரமாணம் எடுக்கப்படுகிறது...


rama adhavan
நவ 05, 2024 02:32

வேலை அற்ற வழக்கு. அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். வட நாட்டில் சர் நேம் ஜாதி பெயர் தான். முஸ்லீம், கிறிஸ்டின் பெயர்களை கொண்டு மதம் தெரியும். என்ன செய்வார்களாம்?


சமீபத்திய செய்தி