உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பாதுகாப்பான நடைமேடைகள் அமைக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

 பாதுகாப்பான நடைமேடைகள் அமைக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: மெட்ரோ ரயில் நிலையம்போல் தெற்கு ரயில்வேக்குட்பட்ட ரயில் நிலையங்களில் விபத்துக்களை தவிர்க்க பாதுகாப்பான நடைமேடைகள் அமைக்க தாக்கலான வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை ஜஹாங்கீர் பாதுஷா தாக்கல் செய்த பொதுநல மனு: ரயில் நிலையங்களில் நடைமேடை, ரயில் பெட்டிகளுக்கு இடையேயான இடைவெளி அதிகம் உள்ளது. நடைமேடைக்கு இணையாக ரயில் பெட்டிகளிலுள்ள படிக்கட்டுகள் சமமாக இருப்பதில்லை. பயணிகள் ரயிலில் ஏறும்போது கவனக்குறைவாக கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். ரயில் மற்றும் நடைமேடை இடைவெளியில் சிக்கி 39 ஆயிரத்து 15 பேர் இறந்துள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேடையானது, ரயில்களின் படிக்கட்டுகளுக்கு சமமாக இடைவெளியின்றி இருக்கும். இதனால் கவனக்குறைவாக கீழே விழுவது, விபத்துக்களை சந்திப்பது தவிர்க்கப்படுகிறது. இதுபோல் தெற்கு ரயில்வேக்குட்பட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பான நடைமேடை வசதியை ஏற்படுத்த ரயில்வேத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக் கறிஞர் ஹாருன் ரசீத்: வேக மாக ரயிலில் ஏற முயற்சிக்கும்போது நடைமேடை, ரயில் பெட்டிக்கு இடையோன இடைவெளியில் சிக்கி பலர் விபத்துக்களை எதிர்கொள்வது தொடர்கிறது. டில்லி, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளதுபோல் நடைமேடைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றார். ரயில்வேத்துறை மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி டிச.10 ல் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை