உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் கோயிலில் தங்கக்கவசம் அணிவிக்க வழக்கு

ராமேஸ்வரம் கோயிலில் தங்கக்கவசம் அணிவிக்க வழக்கு

மதுரை : திருச்சி ஸ்ரீரங்கம் கோபாலகிருஷ்ணன். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயிலில் நித்தியப்படி அணிவிக்கப்பட வேண்டிய ஆவுடையார் தங்கக் கவசம் 2015 ல் சேதமடைந்தது. அது அரசின் கருவூலத்தில் பாதுகாக்கப்படுகிறது. சுவாமிக்கு அணிவிக்காததால் பக்தர்கள் மனம் புண்படுகிறது. சீரமைத்து தங்கக் கவசத்தை சுவாமிக்கு அணிவிக்கக்கோரி அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு அறநிலையத்துறை கமிஷனர், கோயில் இணைக் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்கள் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி