ஜாதிவாரி கணக்கெடுப்பு ரொம்பவும் அவசியம்
வரும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில், அ.ம.மு.க., இடம் பெறும். தமிழகத்தில், அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு பலன் கிடைக்க வேண்டும் எனில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மிக அவசியம்.அதை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாநில அரசே செய்யலாம். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., இதுவரை மதுக்கடைகளை குறைக்கவில்லை. தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,