உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு; பொதுக்குழுவில் தீர்மானம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு; பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை; 'தமிழக அரசு, சமூக நீதியை நிலை நிறுத்த, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என, த.வெ.க., வலியுறுத்தி உள்ளது.

சென்னை திருவான்மியூரில் நடந்த, த.வெ.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும், வக்பு சட்டத் திருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மீனவர் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும். பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது. இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு. லோக்சபா தொகுதி மறுவரையறை தேவையில்லை. மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம். டாஸ்மாக்கின் 1,000 கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில், உரிய விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசு, சமூக நீதியை நிலை நிறுத்த, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண, பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், சுற்றுப்பயணங்கள் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க, விஜய்க்கு அதிகாரம் அளிப்பது என்பது உட்பட, 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை