உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமை கருவேல மரங்களால் காடாக உருமாறிய காவிரி

சீமை கருவேல மரங்களால் காடாக உருமாறிய காவிரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாமக்கல் : 'காவிரி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளதால், நீரோட்டம் தடைபட்டுள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கர்நாடகாவில் உருவாகும் காவிரி ஆறு, தமிழகத்தில், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக பாய்ந்து, பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.தற்போது, காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், ஆங்காங்கே சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, ஆற்றின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன.சீமை கருவேல மரம் ஆற்றில் உள்ள சொற்ப தண்ணீரையும் உறிஞ்சிக்கொள்வதுடன், ஆற்றின் நீரோட்டத்தையும் தடுத்து வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:

காவிரி ஆற்றில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால், தண்ணீர் கடைமடை வரை செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், மக்களின் குடிநீர் தேவைக்கும், விளை நிலங்களின் பாசனத்துக்கும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றாவிட்டால், நிலத்தடி நீர் முழுதும் உறிஞ்சி, வரும் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.அதற்கு முன், சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sankaranarayanan
ஏப் 01, 2025 11:09

காவிரி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளதால், நீரோட்டம் தடைபட்டுள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. இது முற்றிலும் உண்மை உதாரணம் மக்கள் கல்லணை முதல் திருக்காட்டுப்பள்ளி வரை உள்ள காவிரியில் சென்று உடனே பாருங்கள் எங்கு பார்த்தாலும் காவிரியாற்றில் குட்டி குட்டி மணல் தீவு பல்லாயிரம் பல்லாயிரம் பல வருடங்களாகவே தூறு வராததால் ஏற்பட்டு திட்டுக்கள் இவைகள் தண்ணீரின் போக்கை கட்டுப்படுத்துவதுடன் தண்ணீரின் அளவையும் குறைத்துவிடுகிறது மேலும் இவைகளின் ஆற்றின் தண்ணீரின் அபகரிப்பால் சாதாரண தண்ணீர் கூட இரண்டு கரைகளையும் அரித்து அரித்து நன்றாக இருந்த கரைகள் பாழடைகின்றன தண்ணியில் அடித்து செல்லப்படுகின்றன இதை எந்த அரசும் கண்டுகொள்வதே இல்லை


Natarajan Ramanathan
ஏப் 01, 2025 10:43

விவசாய சங்கங்கள் இணைந்து ஒவ்வொரு பகுதியாக பிரித்துக் கொண்டு இதை முற்றிலும் அகற்ற வேண்டும். அரசை நம்பி பிரயோஜனம் இல்லை.


kumaresan
ஏப் 01, 2025 10:41

சீமை கருவேல மரங்கள் மீண்டும் மீண்டும் வளர கூடியவை . அவைகளை அழித்தால் மட்டும் போதாது, ஆற்றில் நிறைய ஆக்ஸிஜன் வெளியேற்றும் மரங்கள், செடிகள் மற்றும் பாசி வகைகளை போடவேண்டும் . நன்றி


Dharmavaan
ஏப் 01, 2025 07:14

இதையெல்லாம் கருதி கோர்ட் ஏன் மணல் கொள்ளையை தடை செய்ய கூடாது


Dharmavaan
ஏப் 01, 2025 07:10

இந்த நல்ல செயலை எல்லாம் சுடாலின் அரசு செய்யாது


Sivagiri
ஏப் 01, 2025 06:22

தமிழ்நாட்டை தவிர இந்தியாவில் வேறு எங்கும் இந்த சீமை கருவேல மரத்தை பார்க்க முடியாது . . தமிழ்நாட்டு பார்டரை தாண்டி கேரளா எல்லைக்குள் தேடினாலும் கிடைக்காது . . .ஆந்திராவில் பார்ட்டரில் கொஞ்சம் இருக்கும் , . . . தமிழ்நாட்டில் மட்டும்தான் , , யாருக்கும் - மனிதருக்கோ விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ - எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் - அனால் நிலத்தில் இருக்கும் நீரை எல்லாம் உறிஞ்சி , தான் மட்டும் செழித்து வளரும் தீய - சீமை கருவேல மரங்கள் உள்ளன . . . அதுவும் 1967-க்கு பிறகுதான் தமிழ்நாட்டு தலை எழுத்து விதி சீரழிந்தது .. . . அதற்கு முன்பாக சாலை ஓரங்களில் , வயல் வரப்புகள் , வேலி அமைக்க - மஞ்சணத்தி மரங்கள்தான் தானாக வளர்ந்து கிடக்கும் - இந்த மஞ்சணத்தி மருத்துவ குணம் கொண்டது - இந்த இலைகள்தான் பச்சிலை என்று கிராமங்களில் , காயத்திற்கு அரைத்து போடுவார்கள் , உடனே ஆறும் , மஞ்சணத்தி இலைகள் கஷாயம் குடித்தால் உடலில் வயிற்றில் நூற்றுக்கணக்கான , நோய்களை போக்கும் , வயிற்றில் அமீபியாசிஸ் - உப்புசம் போக்க இதுவே சிறந்த மருந்து - உடலில் வீக்கம் கட்டிகள் குணமாகும் - குழந்தைகள் விளையாடும் மரப்பாச்சி பொம்மைகள் இந்த மரக்கட்டைகளில் செய்வார்கள் குழந்தைகள் வாயில் வைத்து கடித்து விளையாடினாலும் வயிற்றுக்கு , உடலுக்கு நல்லதே , இப்பேற்பட்ட மஞ்சணத்திக்களை , சாலை ஓரங்களில் , நான்கு வழிச்சாலை நடுவிலும் வீட்டு முன்பக்கம் , ஓரங்களிலும் , அபார்ட்மெண்ட் ஓரங்களிலும் , அழகாக வளர்க்கலாம் , சிறிய பறவைகள் விரும்பும் . . அவ்வப்போது இலைகளை கஷாயம் குடித்து கொள்ளலாம் , காய்கள் நோய் தீர்க்கும் மருந்து . . .


இறைவி
ஏப் 01, 2025 06:21

சீமை கருவேல மரங்கள் மட்டுமல்ல. இன்று காவிரி சீரழிந்து போயிருக்கிறாள் என்பதை மனம் திறந்து விவசாயிகள் மட்டுமல்ல. அனைத்து காவிரி பாசன மாவட்ட மக்களும் மனதில் வலியுடன் உணர வேண்டிய அவசர தருணம். இன்று காவிரி முழுதும் நெய்வேலி காட்டாமணக்கு, சீமை கருவேலம், நாணல் போன்றவை நதியில் பல்கிப் பெருகியிருக்கிறது. அவைகள் நீரோட்டத்தை மட்டும் தடுக்கவில்லை. பூமிக்குள் நீர் புகுந்து நிலத்தடி நீர் உயர்வதையும் தடுக்கிறது. இதற்கு முழு முதல் காரணம் அளவின்றி மணல் கொள்ளை அடித்ததுதான். நதியில் ஆற்று மணல் ஐந்து முதல் பத்து அடிக்கு அதிகமாக இருக்கும் போது, மணலில் செடி கொடிகள் முளைக்காது. மேலும் மணல் அதிகமான நீரை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உடையது. அப்படி மணலில் உறிஞ்சப்பட்ட நீரானது காபி பில்டர் போல சிறிது சிறிதாக மணலின் கீழே இருக்கும் களிமண் படிவத்தின் வழியாக வடிகட்டப் பட்டு பூமிக்குள் இறங்கும். அதன் மூலம் நிலத்தடி நீர் உயரும். ஆனால் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக எந்திரங்கள் மூலம் ஆழமாக மணல் அள்ளப் பட்டதான் பலன், இப்போது மணலின் கீழ் இருந்த களிமண் தரை வெளிப்பட்டு விட்டது. இதற்கு முன்பு நதி படுகை, மக்கள் கைகளினாலும் மாட்டு வண்டியிலும் அவர்கள் தேவைக்கு மட்டும் மணல் எடுத்த போது நதி சீரழியவில்லை. எந்திரங்கள் மூலம் அளவின்றி மணல் கொள்ளை நடந்ததுதான் மொத்த சீரழிவிற்கும் காரணம். நதியில் நீர் வேகமாக ஓடும்போது பூமிக்குள் நீர் இறங்க வழி இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதில்லை. களிமண் தரையில் மேலே சொன்ன மரங்களும் செடிகளும் தான் வளர்கின்றன. இப்படியே போனால் அடுத்த பத்து வருடங்களில் காவிரி நதியில் வீட்டு மனை போடலாம். இந்த இழிநிலையை மாற்ற காவிரியில் அடுத்த ஐம்பது வருடங்களுக்கு மணல் எடுப்பதை முழுதுமாக நிறுத்தினால் நிலைமை சற்று மேம்படும். எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய இந்த நிலைமைக்கு இரு கழகங்கள் மட்டுமே காரணம். அதிக அளவில் அள்ளப்பட்ட மணல், கேரளாவுக்கும், கர்நாடகத்திற்கும் தான் அனுப்பப் பட்டது. எந்த மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தருவதில்லை என்று இவர்கள் அரசியல் செய்தார்களோ, அந்த மாநிலங்களுக்குத்தான் இவர்கள் மணல் அனுப்பி பணம் பண்ணினார்கள். அந்த மாநிலங்களில் ஆற்று மணல் எடுக்க கடும் எதிர்ப்பு உண்டு. மறத்தமிழர்களான நாம்தான் ஓட்டுக்கு பணமும் பிரியாணியும் வாங்கிக் கொண்டு போதையில் எதிர்காலத்தை பணையம் வைத்தோம். வரும் காலங்களில் பஞ்சம் பிழைக்க கேரளா, கர்நாடகம் போவோம். வாழ்க தமிழ். வாழ்க தமிழன்.


கூறமுதலி
ஏப் 01, 2025 05:38

இந்த மரங்களால் ஆறு இருந்த சுவடே இல்லாமல் போய்விடும் கர்நாடகா அரசு தடுப்பணை கட்டுவது நிறுத்த வேண்டும்


N Annamalai
ஏப் 01, 2025 05:37

காவிரி ஆணையத்தில் புகார் செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை