வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Pl carry out in Tamilnadu also,bribe at PWD is high
பொதுப்பணி துறை ஊழலுக்கு பெயர் போனது. சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள். அப்புறம் அடுத்தவன் யோசிப்பான்.
காரைக்கால் : காரைக்காலில் ஆய்வு பணிக்கு சென்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட 5 பொறியாளர்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து, தீவிர விசாரணை நடத்தினர்.புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பல்வேறு பணிகளில் கமிஷன் பெறப்படுவதாக புகார் நிலவியது. அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை ரகசியமாக சி.பி.ஐ., அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் நேற்று காரைக்கால் மாவட்டத்தில் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.மதியம் காரைக்கால் கடற்கரையில் உள்ள சீகல்ஸ் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். மாலையில் அவரை சந்திக்க கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர்கள் மகேஷ், சிதம்பரநாதன், உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன் ஓட்டலுக்கு சென்றனர்.அங்கு காத்திருந்த சி.பி.ஐ., அதிகாரிகள் ஓட்டலில் கூடியிருந்த பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிக்கிய அதிகாரிகளின் வீடுகளில் மற்றொரு குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில், சிக்கிய ஆவணங்களின் பேரில், பிடிபட்ட 5 அதிகாரிகளிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Pl carry out in Tamilnadu also,bribe at PWD is high
பொதுப்பணி துறை ஊழலுக்கு பெயர் போனது. சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள். அப்புறம் அடுத்தவன் யோசிப்பான்.