உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அன்புமணி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ., விரைவுப்படுத்தணும்: ராமதாஸ்

 அன்புமணி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ., விரைவுப்படுத்தணும்: ராமதாஸ்

சென்னை: 'அன்புமணி மீதான ஊழல் வழக்கு விசாரணையை, சி.பி.ஐ., விரைவுப் படுத்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், ராமதாஸ் தலைமையில் நேற்று, பா.ம.க., நிர்வாக குழு கூட்டம் நடந்தது. செயல் தலைவர் ஸ்ரீ காந்தி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 22 பேர் பங்கேற்றனர்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டிக்கிறோம் * பா.ம.க., தலைவரும், ராமதாசின் மகனுமான அன்புமணி மீதான ஊழல் வழக்கு விசாரணையை, சி.பி.ஐ., விரைவுப்படுத்த வேண்டும் * தேர்தல் கமிஷனில் போலி ஆவணங்கள் கொடுத்த அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் * சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க, ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப் படுகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின், ராமதாஸ் அளித்த பேட்டி:

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி, பா.ம.க., பெயர், சின்னம், என் பெயரை பயன்படுத்தக் கூடாது. கட்சியை உருவாக்கிய, நான் இதை சொல்கிறேன். கட்சியை கைப்பற்ற அன்புமணி, பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு என அன்புமணியை எச்சரிக்கிறேன். வரும் சட்டசபை தேர்தலில், கண்டிப்பாக வெற்றி கூட்டணி அமைப்பேன். பா.ம.க., சார்பில் போட்டியிட வேட்புமனுக்களை வாங்க, அவருக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் கமிஷன் உத்தரவையும் மீறி, அன்புமணி செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

அன்புமணி மீது என்ன வழக்கு?

கடந்த 2004 -- 2009ல், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது, உ,பி., - ம.பி., மாநிலங்களில் மருத்துவக் கல்லுாரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு, டில்லி சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சந்திரசேகர்
டிச 18, 2025 21:16

அப்போது சும்மா இருந்து விட்டு இப்போது ஏன் அய்யா பொங்குறீங்க. அந்த காசு இப்போது யார் கிட்ட இருக்கு


R.MURALIKRISHNAN
டிச 18, 2025 20:38

மருத்துவர் ஐயா,நல்ல மருத்துவரை பாருங்க


Vasan
டிச 18, 2025 12:22

An apple a day, will keep both Mango doctors away.


S.V.Srinivasan
டிச 18, 2025 08:13

குடும்ப சண்டையை தெருவுக்கு கொண்டுவந்து ஏன் இப்படி அசிங்க படுத்தறாரு மருத்துவர் ஐயா??


Kalyanaraman
டிச 18, 2025 07:52

எப்போதும் தேர்தல் கூட்டணிக்கு தான் பாமக பெட்டி வாங்கும். இப்போது பாமகவையே நிர்மூலமாக்க மிகப்பெரிய பெட்டியை வாங்கி விட்டார் போல.


manu putthiran
டிச 18, 2025 07:41

உலகின் மிகவும் கேடுகெட்ட அரசியல்வாதி ராமதாஸ் தான்


புதிய வீடியோ